செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வேளாண்மைக்கடன்

சேந்தமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வேளாண்மைக்கடன் - TVNMK 1601
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



16. சேந்தமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வேளாண்மைக்கடன் - TVNMK 1601

அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் . நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வேளாண்மைக்கடன் கோரும் விவசாயிகளுக்கு முறையாக கடன் வழங்கப்படுவதில்லை. தட்டுப்பாட்டின்றி விவசாயக் கடன் வழங்குவதாக அரசு அறிவித்தாலும் வங்கி அலுவலர்கள் அதனை முறையாக பின்பற்றுவதில்லை. பல்வேறு காரணங்களை கூறி வேளாண் கடன் வழங்க மறுப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.கூட்டுறவு வங்கியில் வேளாண்மைக்கடன் கோரும் விவசாயிகளுக்கு முறையாக கடன் வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!


மனு விவரம்

சேந்தமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வேளாண்மைக்கடன்

Publish on: 01-03-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் கூட்டுறவு இணைப்பதிவாளர், கூட்டுறவுத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இணைப்பதிவாளரின் அறிக்கை பெற்று பதில் விரைவில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்


Publish on : 04-03-2010

Members who are approaching sendamangalam PACS for crop loans are sanctioned the loan without any reluctance if they submit relevant documents to the society. If att all thereis any specific complaint that will be dealt with appropriately

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக