செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

நாமக்கல் புதிய பேருந்துநிலையம் கட்டித்தர

நாமக்கல் புதிய பேருந்துநிலையம்

தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....

நாமக்கல் புதிய பேருந்துநிலையம் - TVNMK 1334



அனுப்புநர்: ,
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில செயலாளர்
தமிழக மாணவர் சங்கம் (பா.ம.க)
8.கச்சேரி தெரு
இராசிபுரம்_ 637408 .
9443275800
பெறுநர்:
திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்
நாமக்கல்
நாமக்கல் பேருந்து நிலையம் இடநெருக்கடியால் நாளுக்கு, நாள் திணறி வருகிறது.எனவே, தற்போதுள்ள பேருந்து நிலையத்தை நகரப் பேருந்து நிலையமாக மாற்றம் செய்து, நகருக்கு வெளியே புதிய பேருந்துநிலையம் கட்டித்தர மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!



மனு விவரம்
நாமக்கல் புதிய பேருந்துநிலையம்


Publish on: 22-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்ககைக்காக நாமக்கல் நகராட்சி ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்


: Publish on 23-02-2010

நாமக்கல் நகராட்சி பேருந்து நிலையம் இடநெருக்கடியாக உள்ளது என்பதாலும், வளர்ந்து வரும் நகர வளர்ச்சிக்கும் , பெருகி வரும் வாகனப்போக்குவரத்திற்கும், எதிர்கால தேவைக்கும் போதாது என்பதைக்கருத்தில் கொண்டு புதிய பேருந்து நிலையம் அமைக்க நகராட்சி எல்லைக்குள் தகுதியான இடம் இல்லை என்பதால் நகராட்சியை சுற்றியுள்ள கிராம பகுதிகளை நகராட்சியுடன் இணைத்து நகராட்சி எல்லையை விரிவுபடுத்தி நகருக்கு வெளியே பேருந்து நிலையம் அமைக்க நகர்மன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கருத்துரு பரிசீலனையில் இருந்து வருகிறது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இடுகையிட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக