திங்கள், 16 ஆகஸ்ட், 2010

101-150

not fount
101-133
144-146
Reply
104
126
133

Vacant
126

101. ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இருந்த கிளை அஞ்சலகத்தை மீண்டும் திறக்க வேண்டும்.TVNMK839
101. ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இருந்த கிளை அஞ்சலகத்தை மீண்டும் திறக்க வேண்டும்.TVNMK839
Posted on : 10-02-2010

புகார் விவரம் :
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
advocate
மாநில செயலாளர்
தமிழக மாணவர் சங்கம்
(பா.ம.க)
8.கச்சேரி தெரு
இராசிபுரம்‍‍‍‍‍‍‍‍_ 637408
9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் மாவட்டம்.
பார்வை:1) தினமணி February 05, 2010 கோயம்புத்தூர்
நாமக்கல் மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பிப்.22-ல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் கிழக்கு மாவட்ட வன்னியர் சங்க செயற்குழு கூட்டம் ராசிபுரத்தில் அண்மையில் நடைபெற்றது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இருந்த கிளை அஞ்சலகத்தை மீண்டும் திறக்க வேண்டும். ராசிபுரம் நகரில் நிலவிவரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும். வெண்ணந்தூர் பகுதி வங்கிகளில் மகசூல் கடன், தனிநபர் கடன் போன்ற கடன் உதவி வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் பொருள்களை வாங்குவதற்கு காலை முதல் மாலை வரை நிற்கும் அவல நிலையை சீர்செய்ய வேண்டும். பேருந்துகளில் மறைமுக கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். எருமப்பட்டியில் இருந்து நாமக்கல் வரை மாணவர் நலன் கருதி கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எனவே ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இருந்த கிளை அஞ்சலகத்தை மீண்டும் திறக்கமாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி! நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
advocate
மாநில செயலாளர்
தமிழக மாணவர் சங்கம் (பா.ம.க)

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 10-02-2010

தங்களது மனு கண்காணிப்பாளர் அஞ்சலகத்துறை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கண்காணிப்பாளரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 07-05-2010

The petition is related to Rasipuram Town which comes in the administrative jurisdiction of Salem West Postal Division. Therefore, this petition may be transferred to Superintendent of Post offices, Salem West Division, Salem – 636005(email address is spos_salemwest@rediffmail.com. Superintendent of Pos, Namakkal

Publish on : 13-05-2010

Rasipuram East Class III Delivery Sub post office does not fulfill Departmental norms prescribed for the existance of a post office such as distance and income & cost maintenance, etc. The traffic of this office is also very poor and this office is incurring heavy loss to the Department. hence, Rasipuram East post office has been merged with Rasipuram LSG post office, which is located just 1.6 Kms away from this office . Hence, reopening of Rasipuram East Post office could not be possible, at present.



102. பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்கள் - TVNMK 1309
102. பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்கள் - TVNMK 1309

அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்களும், அதிகப்படியான மருந்துகளும், ஆம்புலன்ஸ் வசதியும் செய்து கொடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மனு விவரம்
பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்கள்

Publish on : 22-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை இணை இயக்குநரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 07-05-2010

பள்ளிபாளையம் அரசு மருத்துவமணையில் கூடுதலாக பணிநியமனம் இயக்குநர் அளவில் நிரப்பப்படல் வேண்டும்.

Publish on : 14-05-2010

இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சென்னை 6 ந.க.எண்.78228 ‍ தி வ 2 3 ௨008 நாள் 31.12.2009 அரசு ஆணை எண் 255 சு(ம)குந (எப்1) துறை நாள் 20.8.2009 ன்படி மருத்துவர்கள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.





103. நாமக்கல் போலீஸார் அலட்சியம் மலைக்கோட்டையில் சமூகவிரோத கும்பல் அட்டகாசம் - TVNMK1482
நாமக்கல் போலீஸார் அலட்சியம் மலைக்கோட்டையில் சமூகவிரோத கும்பல் அட்டகாசம் - TVNMK1482
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் – 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
பார்வை:தினமலர் 23.02.2010
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் மலைக்கோட்டை அமைந்துள்ளது. அதன் இரு புறங்களிலும் குடவறைக் கோவில்கள் அமைந்துள்ளன. தவிர, பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் மலைக்கோட்டை குடவரைக் கோவிலை நோக்கியபடி அமைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆஞ்சநேயர் ஸ்வாமியை வழிபட நாமக்கல் வருகின்றனர்.அவ்வாறு வரும் பக்தர்கள் காண்போர் பிரமிக்கும் வகையில் அமைந்துள்ள குடவறைக் கோவில்களை காணத்தவறுவதில்லை. கோவில்களை கண்டு ரசிக்கும் மக்கள் மலைக்கோட்டையின் அழகையும் காணுகின்றனர். சுற்றுலாப் பயணிகள் மலையில் ஏறுவதற்கு வசதியாக இரும்புக் கைப்பிடியுடன் கூடிய படிகட்டுகள் உள்ளன. அதன்மூலம் மலைக்கோட்டைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள், அங்கு அமைந்துள்ள பல ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட கோட்டை, அகலி, ஆயுதக் கிடங்கு, சுரங்கப்பாதை போன்றவற்றை கண்டு ரசிக்கின்றனர். குறிப்பிட்ட நேரம் மட்டுமே மலைக்கோட்டைக்கு செல்லும் கதவு திறந்து வைக்கப்படும். காலை, மாலை வேலைகளில் கதவு திறந்திருக்கும். அச்சமயங்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் மலைக்கோட்டை சென்று அதன் அழகை கண்டு ரசிக்கின்றனர்.இந்நிலையில், மலைக்கோட்டைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு, அப்பகுதியை வட்டமடித்து வரும் சமூகவிரோத கும்பல்கள் இடைஞ்சல் ஏற்படுத்துவதாக தெரிகின்றது.நண்பகல் மற்றும் மாலை நேரங்களில் தனியாக செல்வோரை அக்கும்பல் மிரட்டி பணம் பறிப்பதுடன் தாக்கவும் செய்கின்றனர். இரு தினங்களுக்கு முன் பள்ளி சிறுவர்கள் சிலர் மாலை வேலையில் மலைக்கோட்டைக்கு சென்றுள்ளனர். அச்சிறுவர்களை அங்கிருந்த கும்பல் அழைத்து, அவர்களிடம் இருந்த மொபைல் ஃபோன், பணம் உள்ளிட்டவற்றை கேட்டு மிரட்டினர். அதை கொடுக்க சிறுவர்கள் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த கும்பல் அவர்களை தாக்கி பணம், மொபைல் ஃபோன் போன்றவற்றை பறித்தனர். "இதுபற்றி வெளியில் தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாகவும்'' எச்சரித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீஸிலும் புகார் செய்துள்ளனர்.புகாரில், மலைக்கோட்டையில் அடாவடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தெளிவாக குறிப்பிட்டனர். எனினும், அப்புகாரை போலீஸார் அலட்சியம் செய்ததுடன் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகின்றது..""மலைக்கோட்டைக்கு வெளியூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி உள்ளூர் நபர்களும் நாள்தோறும் செல்கின்றனர். நாமக்கல் நகர மக்களுக்கு இருக்கும் ஒரே பொழுபோக்கு மலைக்கோட்டை மட்டுமே. மலைக்கோட்டைக்கு செல்லும் மக்களுக்கு சமீப காலமாக பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அங்கு சுற்றித்திரியும் கும்பல் தனியாக செல்லும் பெண்கள், சிறுவர்களிடம் வாலாட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.""மேலும், மிரட்டியும் பணம் பறிக்கின்றனர். இரு தினங்களுக்கு முன் சிறுவன் ஒருவனை அக்கும்பல் மிரட்டி பணம், நகையை பறித்துள்ளது. அதுபோல் சில மாதத்துக்கு முன் இளம்பெண் ஒருவரிடம் அக்கும்பல் கைவரிசை காட்டியுள்ளதாகவும் தெரிகின்றது. ""மலைக்கோட்டையில் ரெகுலராக போலீஸார் சிலரை பணியில் ஈடுபடுத்தினால் மட்டுமே குற்றச்செயல்களை தடுக்க முடியும் என்பதுடன், அங்கு செல்லும் மக்களுக்கும் பாதுகாப்பாக அமையும்,'''' எனவே,மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.2010-02-25 08:32:34
மனு விவரம்
நாமக்கல் போலீஸார் அலட்சியம் மலைக்கோட்டையில் சமூகவிரோத கும்பல் அட்டகாசம்

Publish on : 25-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் மாவட்ட காவல் துறைக்கண்காணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. காவல்துறை கண்காணிப்பாளரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 13-05-2010

ந.க.எண்.இ5ஃ267ஃ11145ஃ2010. நாள்.13.05.2010. விசாரணையில் ஈரோடு மாவட்டத்தை சோ்ந்த ப.மோகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரிகளைக் கண்டு பிடித்தும் களவு போன சொத்துகளை மீட்டும், எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பியும், தொடர்ந்து குற்றங்கள் நடவாமல் கண்காணிக்க சாதாரண உடைகளில் காவலர்களை ரோந்து அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


104. விடுப்பு கால ஊதியம் கோரல் - TVNMK 1855
விடுப்பு கால ஊதியம் கோரல் - TVNMK 1855

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
மோகனூர் ஒன்றியத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் 2008-09ம் கல்வி ஆண்டில் நேரடியாக கல்லூரியில் சென்று பி.எட்., கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீண்டும் பணியில் சேர்ந்த 300 நாட்களுக்கு மேலாகியும் 2010 மார்ச் 1ம் தேதி வரையில் அவர்களுக்கு உரிய விடுப்பு கால ஊதியம் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பி.எட்., படிப்பு விடுப்பு கால ஊதியத்தை உடனடியாக பெற்று வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Read Full Post » மனு விவரம்
விடுப்பு கால ஊதியம் கோரல்

Publish on : 03-03-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதன்மைக் கல்வி அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

________________________________________
Publish on : 29-04-2010
அன்னார் 2008.09ம் ஆண்டிற்கு உரிய வருமானவரி கணக்கீட்டுத் தாள் சமர்ப்பித்தால் உடன் நிலுவை ஊதியம் பெற்று வழங்கப்படும்.
மனு விவரம்
விடுப்பு கால ஊதியம் கோரல்

Publish on : 03-03-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதன்மைக் கல்வி அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

________________________________________
Publish on : 29-04-2010
அன்னார் 2008.09ம் ஆண்டிற்கு உரிய வருமானவரி கணக்கீட்டுத் தாள் சமர்ப்பித்தால் உடன் நிலுவை ஊதியம் பெற்று வழங்கப்படும்.



105. போதைமலைக்கு சாலை
போதைமலைக்கு சாலை

Feb 11th, 2010 by மக்கள் குறைதீர்ப்பு | | |

அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில செயலாளர்
தமிழக மாணவர் சங்கம் (பா.ம.க)
8.கச்சேரி தெரு
இராசிபுரம்‍‍‍‍‍‍‍‍_ 637408
.9443275800

பெறுநர்: திரு,மாவட்ட ஆட்சியர் அவர்கள்
நாமக்கல்

வெண்ணந்தூர் ஓன்றியம் கீழூர் ஊராட்சி போதைமலைக்கு சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி!

Tags: நல்வினை

Posted in குறைதீர் மன்றம்
One Response to “போதைமலைக்கு சாலை”
nklmvgdp says:
February 11, 2010 at 1:01 pm

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

மாவட்ட ஆட்சியர்
நாமக்கல்

106 குட்டை, குளம் வெள்ளவாரி பகுதிகளை ஆழப்படுத்த கோரி TVNMK 1207
குட்டை, குளம் வெள்ளவாரி பகுதிகளை ஆழப்படுத்த கோரி TVNMK 1207

Posted on : 16-02-2010

புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் – 637408 செல்:9443275800 பெறுநர்: மாவட்ட ஆட்சியர், நாமக்கல் . நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரத்தில் முத்துகாப்பட்டி, பழையபாளையம், சிவநாயக்கன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, எருமப்பட்டி, தேவராயபுரம், வரகூர், பவித்திரம், பவித்திரம்புதூர் ஆகிய ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிக்குட்பட்ட விளைநிலங்கள் பெரும்பகுதி மலை அடிவாரத்திலேயே உள்ளன. கொல்லிமலையில் பெய்யும் மழைநீர் காட்டாற்று வெள்ளமாக இந்த ஊராட்சிகளின் குட்டை, குளங்களுக்கு நீர்வரத்தாக வந்து சேரும். தற்போது, வெள்ளவாரிகள் அனைத்தும் தார்சாலையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மழைக் காலங்களில் வெள்ளம் நான்கு திசைகளிலும் சிதறி வீணாகிறது. விளைநிலங்களையும் சேதப்படுத்துகிறது. எனவே, வெள்ளவாரி பகுதிகளை ஆழப்படுத்தி நீர்வரத்தை முறைப்படுத்த வேண்டும். இதன்மூலம் சுற்றுப் பகுதியில் உள்ள அனைத்து ஏரி, குளங்கள் நிரம்புவதுடன் கிணறுகளிலும் நீர்மட்டம் உயரும். வெள்ளவாரி தடைபட்டுள்ளதால் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான தூசூர் ஏரிக்கு தண்ணீர் வருவது பாதிக்கப்படுகிறது. இந்த ஏரி நிரம்பினால் சுற்றுப் பகுதிகளில் 5 கி.மீ. தூரத்துக்கான கிணறுகளில் நீர்மட்டம் உயரும்.மேலும், இந்த ஏரி நிரம்பினால் பாலப்பட்டி, காடிசெட்டிப்பட்டி, திப்ரமகாதேவி, வலையப்பட்டி, மேட்டுப்பட்டி, அரூர் ஆண்டாபுரம் ஆகிய பகுதிகளுக்கு பெருக்கெடுத்து விவசாயம் பெருகும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 16-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை (சரபங்கா) அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும் மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 29-04-2010

2008 ம் ஆண்டில் கொல்லிமலையில் பெய்த மழையின் காரணமாக கருவட்டாற்றின் கரைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதனை சரிசெய்ய தேவையான நிதி ஒதுக்கீடு 2009 2010 ஆம் ஆண்டில் இல்லாததால் தேவையான நிதி ஒதுக்கீடு பெற்று தருமாறு கருத்துரு ரூ.20.00 லட்சத்துக்கு கேட்டு தலைமை பொறியாளர் பொ.ப.து நீர்வள ஆதார அமைப்பு திருச்சி அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டு நகல் மாவட்ட ஆட்சித் தலைவர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.தேவையான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டதும் பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.



107 தொழிற்சாலை மாசு TVNMK 1252
தொழிற்சாலை மாசு TVNMK 1252

Posted on : 11-02-2010

புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை.நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில செயலாளர் தமிழக மாணவர் சங்கம் (பா.ம.க) 8.கச்சேரி தெரு இராசிபுரம்‍‍‍‍‍‍‍‍_ 637408 செல்.9443275800 பெறுநர்: திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள் நாமக்கல் மாவட்டம் நாமக்கல் இராசிபுரம்‍‍‍‍‍‍‍‍ வட்டம் உடுப்பத்தான் புதூரில் உள்ள ரப்பர் தொழிற்சாலை மாசுகளை கட்டுப் படுத்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 11-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்.

Publish on : 25-02-2010

இராசிபுரம்‍‍‍‍‍‍‍‍ வட்டம் உடுப்பத்தான் புதூரில் உள்ள ரப்பர் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய காற்று மாசுத் தடுப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு இயங்கி வருகின்றன.


108 அங்கீகாரம் பெற்ற பள்ளி விவரங்களை வெளியிட்டால... TVNMK 874
அங்கீகாரம் பெற்ற பள்ளி விவரங்களை வெளியிட்டால..... TVNMK 874

Posted on : 09-02-2010

புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை.நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில செயலாளர்
தமிழக மாணவர் சங்கம் (பா.ம.க)
8.கச்சேரி தெரு
இராசிபுரம்‍‍‍‍‍‍‍‍_ 637408
.9443275800

பெறுநர்: திரு,மாவட்ட ஆட்சியர் அவர்கள்
நாமக்கல் மாவட்டம்
நாமக்கல்

அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் தங்களது குழந்தைகளை பெற்றோர் சேர்ப்பதற்கு வசதியாக, மாவட்ட அங்கீகாரம் பெற்ற மெட்ரிக் பள்ளிகள், நர்சரி பள்ளிகளின் பெயர் பட்டியலை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் பெயர்கள், அங்கீகாரம் எந்த தேதி வரை உள்ளது போன்ற விவரங்களை வெளியிட்டால், பெருமளவு பிரச்னைகளை தீர்க்க முடியும். அங்கீகாரம் பெறாத பள்ளிகளால், மாணவர்கள் மட்டுமின்றி, கல்வித் துறைக்கும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

மெட்ரிக் பள்ளிகளின் முதல் இயக்குனராக நாராயணசாமி பதவி வகித்த போது, மெட்ரிக் பள்ளிகளை ஒழுங்குமுறைப்படுத்தியதோடு, அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் பட்டியலையும் மாவட்ட வாரியாக தயாரித்து, பெற்றோர் அறிந்து கொள்ள, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தார். மேலும், அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும், "அப்டேட்'' செய்து வெளியிடவும் நடவடிக்கை எடுத்தார். ஆனால், அவருக்குப் பிறகு மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக பல அதிகாரிகள் பொறுப்பு வகித்தபோதும், அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் பட்டியலை வெளியிட ஏனோ ஆர்வம் காட்டவில்லை.

அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் பெயர், அமைந்துள்ள இடம், மாவட்டம், எந்த வகுப்புகள் வரை செயல்பட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது, எந்த தேதி வரை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது, தொலைபேசி எண் போன்ற விவரங்களை வெளியிட வேண்டும். அங்கீகாரம் பெற்ற மெட்ரிக் பள்ளிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டால், அது மாணவர்களை விட துறைக்கும் பெரிய உதவியாக இருக்கும்.

அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டால், அதைப் பார்த்து பிள்ளைகளை பள்ளிகளில் சேர்க்க உதவியாக இருக்கும். அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் சேர்ந்துவிட்டு, பின் மாணவர்களுக்கு பிரச்னை என்றால், அது துறை அதிகாரிகளுக்குத் தான் தலைவலி. இதை உணர்ந்து, இணையதளத்தில் அனைத்து பள்ளிகளின் விவரங்களை வெளியிடுவதோடு, அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் பெயர்கள் அடங்கிய புத்தகத்தையும், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி!

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 09-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி் வைக்கப்பட்டுள்ளது. முதன்மைக் கல்வி அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர், நாமக்கல்.

Publish on : 02-03-2010

சுயநிதி, மெட்ரிக் பள்ளிகளின் பெயர் பட்டியலை இணையதளத்தில் வெளியிட முதன்மைக் கல்வி அலுவலரின் அதிகார வரம்புக்கு உட்பட்டது அல்ல என மனுதாரருக்கு அறிவிக்கப்படுகிறது. மேலும் விபரங்கள் பள்ளிக் கல்வி இணைய தளத்தில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்தையும் மனுதாரருக்குத் தெரிவிக்கப்படுகிறது.



109 புகைபிடிப்பது போன்ற படங்களுடன் வெளிவரும் சுவரொட்டிகள்,விளம்பரம் தடை செய்ய வேண்டும்
புகைபிடிப்பது போன்ற படங்களுடன் வெளிவரும் சுவரொட்டிகள்,விளம்பரம் தடை செய்ய வேண்டும் TVNMK869

Posted on : 09-02-2010

புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை.நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில செயலாளர் தமிழக மாணவர் சங்கம் (பா.ம.க) 8.கச்சேரி தெரு இராசிபுரம்‍‍‍‍‍‍‍‍_ 637408 .9443275800 பெறுநர்: திரு,மாவட்ட ஆட்சியர் அவர்கள் நாமக்கல் மாவட்டம் நாமக்கல் நாமக்கல் மாவட்டம் முழுவதும் புகைபிடிப்பது போன்ற படங்களுடன் வெளிவரும் சுவரொட்டிகள், பதாகைகள், விளம்பர பலகைகளை தடை செய்ய வேண்டும்

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 09-02-2010

தங்களது மனு நாமக்கல் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு பொறியாளருக்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர், நாமக்கல்.

Publish on : 25-02-2010

இராசிபுரம், நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய நகரர்ட்சி ஆணையாளர்களுக்கு தொலைபேசி மூலமாகவும், தபால் மூலமாகவும் நடவடிக்கை எடுத்து பதில் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இப்படிக்கு, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் நாமக்கல்.

Publish on : 25-02-2010

நாமக்கல் நகர் முழுவதும் பதாகைகள் மற்றும் விளம்பர பலகைகள் அவ்வப்போது அகற்றப்பட்டு வருகிறது. மேலும் சுவரொட்டிகள் நகர் முழுவதும் துப்புரவு பணியாளர்களைக்கொண்டு உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது. மேற்படி பணிகள் துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவு அலுவலரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் நகராட்சி மூலம் எந்த விளப்பர பலகை வைப்பதற்கும் அனுமதி அழிப்பதில்லை. மாவட்ட ஆட்சியரின் தொடுவானம் வலைப்பூவில் குறிப்பிட்டுள்ளபடி புகைபிடிப்பதுபோன்ற படங்கள் நகரில் இருக்கும் பட்சத்தில் உடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் திறந்த வெளியில் புகைபிடிப்பவர்கள் மீது அவ்வப்போது துப்புரவு அலுவலர் மூலமாக அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

Publish on : 26-02-2010

நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் ஊராட்சி ஓன்றிய ஆணையாளர்களுக்கு, புகைப்பிடிப்பது சம்பந்தமான விளம்பர தட்டிகள் இருந்தால் அதை அகற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




110 நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் பொருள்களை வாங்குவதற்கு காலை முதல் - TVNMK849
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் பொருள்களை வாங்குவதற்கு காலை முதல் - TVNMK849

Posted on : 10-02-2010

புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை.நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில செயலாளர் தமிழக மாணவர் சங்கம் (பா.ம.க) 8.கச்சேரி தெரு இராசிபுரம்‍‍‍‍‍‍‍‍_ 637408 .9443275800 பெறுநர்: திரு,மாவட்ட ஆட்சியர் அவர்கள் நாமக்கல் மாவட்டம் நாமக்கல் பார்வை:1) தினமணி February 05, 2010 கோயம்புத்தூர் நாமக்கல் மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பிப்.22-ல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் கிழக்கு மாவட்ட வன்னியர் சங்க செயற்குழு கூட்டம் ராசிபுரத்தில் அண்மையில் நடைபெற்றது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இருந்த கிளை அஞ்சலகத்தை மீண்டும் திறக்க வேண்டும். ராசிபுரம் நகரில் நிலவிவரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும். வெண்ணந்தூர் பகுதி வங்கிகளில் மகசூல் கடன், தனிநபர் கடன் போன்ற கடன் உதவி வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் பொருள்களை வாங்குவதற்கு காலை முதல் மாலை வரை நிற்கும் அவல நிலையை சீர்செய்ய வேண்டும். பேருந்துகளில் மறைமுக கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். எருமப்பட்டியில் இருந்து நாமக்கல் வரை மாணவர் நலன் கருதி கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எனவே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் பொருள்களை வாங்குவதற்கு காலை முதல் மாலை வரை நிற்கும் அவல நிலையை சீர்செய்ய வேண்டுமாய் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 10-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட வழங்கல் அலுவலர் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட வழங்கல் அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர், நாமக்கல்.

Publish on : 26-02-2010

2000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளை பிரித்து 20 கடைகள் புதியதாக திறக்கப்பட்டுள்ளன. மேலும் 1500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள 17 கடைகள் புதியதாக திறக்க மாவட்ட ஆட்சியரால் உத்திரவிடப்பட்டுள்ளது.



111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் - TVNMK942

Posted on : 10-02-2010

புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் – 637408 செல்:9443275800 பெறுநர்: மாவட்ட ஆட்சியர், நாமக்கல் மாவட்டம். அனைவருக்கும் கல்வி இயக்க நடுநிலைப்பள்ளிகளுக்கு பாடவாரியாக பட்டதாரி ஆசிரியர்களை அனுமதிப்பதுபோல், மற்ற நடுநிலைப்பள்ளிகளுக்கும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அனுமதிக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 10-02-2010

தங்களது மனு நாமக்கல் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதன்மைக் கல்வி அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 02-03-2010

அனைவருக்கும் கல்வி இயக்கம் நடுநிலைப்பள்ளிகளுக்கு பாடவாரியாக பட்டதாரி ஆசிரியர்களை அனுமதிப்பது போல, மற்ற நடுநிலைப் பள்ளிகளுக்கும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அனுமதிப்பது சார்பாக அரசால் ஆணைகள் பிறப்பிக்கப்படும் பட்சத்தில் பணியிடம் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. தற்பொழுது நடுநிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்ற தகவலும் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.





112 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு வழங்கப்படாமல் உள்ள மின் கட் டண நிலுவைத் தொகை TVNMK937
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு வழங்கப்படாமல் உள்ள மின் கட் டண நிலுவைத் தொகை TVNMK937

Posted on : 10-02-2010

புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் – 637408 செல்:9443275800 பெறுநர்: மாவட்ட ஆட்சியர், நாமக்கல் மாவட்டம். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு வழங்கப்படாமல் உள்ள மின் கட்டண நிலுவைத் தொகையை வழங்க மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வைக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 10-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வி அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 29-04-2010

2010.11ம் ஆண்டிற்கு மின் கட்டண தொகையாக ரூ.400000(ரூபாய் நான்கு இலட்சம்)பெறப்பட்டுள்ளது. கேட்புபட்டியல் கோரப்பட்டுள்ளது.பெறப்பட்டவுடன் மின்வாரியத்திற்கு நேரடியாக செலுத்தப்படும்.






113 தும்மங்குறிச்சி பள்ளி மாணவ, மாணவியர் போதிய பேருந்து வசதி TVNMK1106
தும்மங்குறிச்சி பள்ளி மாணவ, மாணவியர் போதிய பேருந்து வசதி TVNMK1106

Posted on : 12-02-2010

புகார் விவரம் :
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் – 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
நாமக்கல்லை அடுத்த தும்மங்குறிச்சி பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பெரும்பாலான தேவைகளுக்கு நாமக்கல்லுக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் நாமக்கல் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் வந்து செல்கின்றனர். ஆனால், இப் பகுதிக்கு போதிய பேருந்து வசதியில்லை. கிராமத்துக்கு வரும் பேருந்தும் முறையாக வருவதில்லை. இதன் காரணமாக பள்ளிகளுக்கு பல கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டிய நிர்பந்தம் உள்ளது. எனவே, தும்மங்குறிச்சி பகுதிக்கு முறையான போக்குவரத்து வசதி செய்துதர மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி! (ஒம்)நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 12-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மேலாளர் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலாளரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 31-03-2010

நாமக்கல்லிருந்து 8.5 கி.மீ தொலைவில் உள்ள தும்மங்குறிச்சிக்கு தநாஅபோ சேலம் மண்டல நகரபேருந்து ஒன்றின் மூலம் காலை மாணவ மாணவியர் வசதிக்காக 2 நடைகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Publish on : 06-05-2010

நாமக்கல்லிலிருந்து 8.5 கி.மீ தொலைவில் உள்ள தும்மங்குறிச்சிக்கு தநாஅபோக சேலம் மண்டல நகரப்பேருந்து ஒன்றின் மூலம் காலை மாணவ மாணவியர் வசதிக்காக 2 நடைகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது



114 நாமக்கல் நகரின் குழிகள் சரிவர மூடப்படாத சாலைகள் TVNMK1334
நாமக்கல் நகரின் குழிகள் சரிவர மூடப்படாத சாலைகள் TVNMK1334

Posted on : 22-02-2010

புகார் விவரம் :
அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில செயலாளர்
தமிழக மாணவர் சங்கம் (பா.ம.க)
8.கச்சேரி தெரு
இராசிபுரம்‍‍‍‍‍‍‍‍_ 637408 .
9443275800
பெறுநர்:
திரு,மாவட்ட ஆட்சியர் அவர்கள்
நாமக்கல்
நாமக்கல் நகரின் பல பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாததால் சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. புதிய சாலை அமைக்கும் வரை பழுதடைந்த சாலைகளை செப்பனிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 22-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் நகராட்சி ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 23-02-2010

நாமக்கல் நகரில் பாதாள சாக்கடை திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இப்பணியில் 60 கிமீ. நீளமுள்ள சாலைகள் தோண்டப்பட்டு பாதாள சாக்கடை திட்டப்பணி செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக சாலை மேம்பாட்டு நிதியில் இருந்து கோ ஆப்ரேட்டிவ் காலனி, 1 மற்றும் 2 வது தெருக்கள், கலைவாணி நகர், திருநகர் மெயின் ரோடு ரோட்டரி உறால் தெரு, திருநகர் குறுக்கு தெருக்கள், இந்திரா நகர் மெயின் ரோடு மற்றும் குறுக்கு தெருக்கள், பரணி நகர், டீச்சர்ஸ் காலனி ஆகிய இடங்களில் 8.30 கி.மீ நீளமுள்ள சாலைகள் செப்பனிடப்பட்டு தார் சலைகளாக மாற்றம் செய்யப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் 12 வது நிதிக்குழு 2008 2009 ம் ஆணடு நிதியில் ஏ.எஸ்.பேட்டை மெயின் ரோடு மற்றும் குறுக்கு தெரு சாலைகள் 1.20 கி.மீ நீளம் செப்பனிடப்பட்டு தார் சாலையாக அமைக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. மொத்தம் 9.20 கி.மீ. நீளம் சாலை செப்பனிடப்பட்டுவிட்டது. மேலும் 12 வது நிதிக்குழு மானியம் 2009 2010 ஆண்டின் கீழ் ஆர்.பி.புதுர் மெயின் ரோடு பணி 0.500 கி.மீ நீளம் தேர்வு செய்யப்பட்டு பணி உத்திரவு ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பணியில் குடிநீர் பிரதான குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவுற்றதும் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் எனப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தற்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் பாதாள சாக்கடை திட்டத்திற்கு என தோண்டப்பட்ட சாலைகளை மேடு பள்ளங்களை கிராவல் மண் கொண்டு மட்டப்படுத்தி சரி செய்யும் பணி மேற்கொண்டு வருகின்றனர். இப்பணியை விரைவில் முடித்து தருவதாக நிர்வாக பொறியாளர், தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம், நாமக்கல் அவர்கள் உறுதி அளித்துள்ளார்கள். மேலும் நகரில் மீதம் உள்ள சாலைகளை செப்பனிட நகராட்சி நிர்வாக ஆணையர் அவர்களுக்கு கருத்துரு ரூ.28.52 கோடிக்கு தயார் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைக்கப்பெற்றவுடன் பணி விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.




115 நாமக்கல்லில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை காலிப் பணியிடங்கள் TVNMK1967

நாமக்கல்லில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை காலிப் பணியிடங்கள் TVNMK1967

Posted on : 05-03-2010

புகார் விவரம் :

அனுப்புநர்: . நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் – 637408 செல்:9443275800

பெறுநர்: மாவட்ட ஆட்சியர், நாமக்கல் .
நாமக்கல்லில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பல்வேறு நவீன கருவிகளும் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் இருந்தாலும் போதிய உதவியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் பெரிதும் அவதிப்படும் சூழல் உள்ளது. குறிபபாக புறநோயாளிகளாக வரும் நபர்கள் காயங்களுக்கு மருந்து கட்டவதற்கு பல மணிநேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது. துப்புரவு பணியாளர்களும் பற்றாக்குறையாக உள்ளனர். எனவே, காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்து மருத்துவ உதவிகளை விரைந்து வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 14-05-2010

நாமக்கல் மாவட்டத்தில் உதவியாளா் பணியிடம் இயக்குநா் அளவில் நியமனம் செய்யப்படும். துப்பரவ பணியாளா் பணியிடம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து நான் அவைலபிலிட்டி சான்றிதல் எபற்ற பின்னரெ பணியிடம் புர்த்தி டிசய்யப்படும்.


116 நவணி கிராமம் பிளாஸ்டிக் டேங்க் தயாரிக்கும் தொழிற்சாலைக்காக நிலம் கையகப்படுத்தி ஆலை TVNMK5526

நவணி கிராமம் தொழிற்சாலை துவங்கப்பட்டால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதுடன், அருகாமையில் உள்ள குடியிருப்புகளில் வசிப்போருக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது பிளாஸ்டிக் தொழிற்சாலை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பாக TVNMK5526

Posted on : 27-04-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர் மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800 nalvinaiviswaraju@gmail.com.

பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்

புகார் விவரம் : நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள நவணி கிராமம். இங்கு 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல்வேறு சமூகத்தவரும் வசித்து வரும் இக்கிராமத்தில் விவசாய நிலங்களும் உள்ளன. இந்நிலையில் இப்பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் பிளாஸ்டிக் டேங்க் தயாரிக்கும் தொழிற்சாலைக்காக நிலம் கையகப்படுத்தி ஆலை துவங்குவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொழிற்சாலை துவங்கப்பட்டால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதுடன், அருகாமையில் உள்ள குடியிருப்புகளில் வசிப்போருக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.தொழிற்சாலை அமைவதால் ஏற்படும் அபாயத்தை உணர்ந்து தொழிற்சாலை அமைக்க தடை விதிக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 28-04-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட சுற்று சூழல் பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 29-04-2010

நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம் நவணி கிராமத்தில் மேற்படி இடம் 28.04.2010 அன்று தல ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்போது, பிளாஸ்டிக் தொட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கான கட்டுமான பணிகள் ஏதும் நடைபெறாமல், இடம் காலி நிலமாகவே இருந்தது பார்வையிடப்பட்டது. அதில் தொழிற்சாலை தொடங்க இருக்கும் நபர்களோ, வேலையாட்களோ யாரும் இல்லை. அருகிலுள்ள கிராம விவசாயிகளை விசாரித்த போது, குஜராத் மாநிலத்துக்காரர்கள் அத்தொழிற்சாலையை தொடங்க இருப்பதாகவும், அவர்களுடைய முகவாியோ, தொலைபேசி எண்ணோ ஏதும் இல்லை எனக் கூறினார்கள். எனவே தலத்தில் ஏதும் கட்டுமானங்கள் ஆரம்பிக்கப்பட்டால், உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தொிவிக்கப்படுகிறது.










117 பிளாஸ்டிக் தொழிற்சாலை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு - பொதுமக்களை மிரட்டும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க TVNMK5527
பிளாஸ்டிக் தொழிற்சாலை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு - பொதுமக்களை மிரட்டும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க TVNMK5527

Posted on : 27-04-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800

பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்

புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800 பெறுநர்: மாவட்ட ஆட்சியர், நாமக்கல் . பொருள்:பிளாஸ்டிக் தொழிற்சாலை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு - பொதுமக்களை மிரட்டும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க பார்வை:தினமலர்&தினமணி 27.04.2010 நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள நவணி கிராமம். இங்கு 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல்வேறு சமூகத்தவரும் வசித்து வரும் இக் கிராமத்தில் விவசாய நிலங்களும் உள்ளன. இந்நிலையில் இப் பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் பிளாஸ்டிக் டேங்க் தயாரிக்கும் தொழிற்சாலைக்காக நிலம் கையகப்படுத்தி ஆலை துவங்குவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொழிற்சாலை துவங்கப்பட்டால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதுடன், அருகாமையில் உள்ள குடியிருப்புகளில் வசிப்போருக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்களை ஒரு தரப்பினர் மிரட்டுகின்றனர். தொழிற்சாலை அமைவதால் ஏற்படும் அபாயத்தை உணர்ந்து தொழிற்சாலை அமைக்க தடை விதிக்க வேண்டும், பொதுமக்களை மிரட்டும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 28-04-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட சுற்று சூழல் பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 03-06-2010
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள நவணி கிராமத்தில் உள்ள மேற்படி இடம் 28.04.2010 அன்று தல ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்பொழுது பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கான கட்டுமான பணிகள் ஏதும் நடைபெறாமல், இடம் காலியாக இருந்தது. அதில் தொழிற்சாலை தொடங்க இருக்கும் நபர்களோ, வேலையாட்களோ யாரும் இல்லை. அருகில் உள்ள கிராம விவசாயிகளை விசாரித்தபொழுது வேறு மாநிலத்துகாரர் அத்தொழிற்சாலையை தொடங்க இருப்பதாக தெரிவித்தார்கள். மாசு கட்டுபாடு வாரிய அனுமதியின்றி தொழிற்சாலை கட்டக்கூடாது என்று சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.







118 காவிரி கழிவுநீர் கலப்பதை தடை செய்ய TVNMK5547
காவிரியாற்றிலும் கழிவுநீர் கலப்பதை தடை செய்ய TVNMK5547

Posted on : 04-05-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர் மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800 nalvinaiviswaraju@gmail.com

பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்

புகார் விவரம் : நாமக்கல் மாவட்டம் காவிரியாற்றிலும் கழிவுநீர் கலப்பதை தடை செய்ய வேண்டும். ஆற்றுக் கரையோரம் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் இருந்து வரும் கழிவுநீர், சாயக் கழிவுநீர் ஆகியவை கலப்பதால் தொற்றுநோய் பரவும் சூழல் உள்ளது. எனவே, கரையோரப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடை செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 04-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட சுற்று சூழல் பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 12-05-2010

நாமக்கல் மாவட்டத்தில் நகராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீரை உரிய முறையில் சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதியிலுள்ள சாயத்தொழிற்சாலைகளை தங்கள் வளாகத்தினுள்ளேயே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சுத்திகரிப்பு செய்யப்பட்ட கழிவுநீரை மறு உபயோகம் செய்ய வலியுறுத்தப்பட்டு வருகிறது. கழிவு நீரை மறுசுழற்சி முறையினை செயல்படுத்தாத சாயத்தொழிற்சாலைகள் கண்காணிப்பு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விதிமுறைகள் மீறும் சாயத்தொழிற்சாலைகள் மூடி சீல் வைக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கையினை மாசுக்கட்டுபாட்டு வாரியம் தொடர்ந்து எடுத்து வருவதனால் காவிரி ஆறு மாசுபடுவது படிப்படியாக நிறுத்தப்பட்டு விடும் என மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.

Publish on : 14-05-2010

நாமக்கல் மாவட்டத்தில் நகராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீரை உரிய முறையில் சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதியிலுள்ள சாயத்தொழிற்சாலைகளை தங்கள் வளாகத்தினுள்ளேயே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சுத்திகரிப்பு செய்யப்பட்ட கழிவுநீரை மறு உபயோகம் செய்ய வலியுறுத்தப்பட்டு வருகிறது. கழிவு நீரை மறுசுழற்சி முறையினை செயல்படுத்தாத சாயத்தொழிற்சாலைகள் கண்காணிப்பு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விதிமுறைகள் மீறும் சாயத்தொழிற்சாலைகள் மூடி சீல் வைக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கையினை மாசுக்கட்டுபாட்டு வாரியம் தொடர்ந்து எடுத்து வருவதனால் காவிரி ஆறு மாசுபடுவது படிப்படியாக நிறுத்தப்பட்டு விடும் என மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.





119 ஆசிரியர் முன்னுரிமை பட்டியல்
ஆசிரியர் முன்னுரிமை பட்டியல் TVNMK5567

Posted on : 04-05-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர் மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800 nalvinaiviswaraju@gmail.com

பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்

புகார் விவரம் : நாமக்கல் மாவட்ட தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் 2010 ஜனவரி 1ம் தேதிக்கான ஆசிரியர் முன்னுரிமை பட்டியல் இதுவரை வெளியிடவில்லை. அதை வெளியிட மாவட்ட தொடக்கக்கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 05-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 07-05-2010

சென்னை 6 தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களால் இண்டர்நெட் வழியாக விரைவில் வெளியிடப்படவுள்ளது என மனதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது




120 நாமக்கல் பாதாள சாக்கடை பணிகள் விரைந்து முடிக்க
நாமக்கல் பாதாள சாக்கடை பணிகள் விரைந்து முடிக்க TVNMK5584

Posted on : 06-05-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர் மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800 nalvinaiviswaraju@gmail.com

பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்

புகார் விவரம் : நாமக்கல் நகராட்சியில் 30 வார்டுகளிலும் பாதாள சாக்கடை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை பணி துவங்கப்பட்டது. இத்திட்டத்துக்காக நகராட்சி பகுதியில் குழி தோண்டப்பட்டு குழாய் அமைக்கும் பணி நடந்தது. குழி தோண்டும் பகுதியில் பாறைகள் தென்பட்டதால், பணியில் சுணக்கம் ஏற்பட்டு பணிகள் அவ்வப்போது தடைபட்டது. நெடுஞ்சாலை பகுதியில் குழி தோண்டுவதற்கு கூடுதலாக வரி கேட்டதாலும், மதிப்பீட்டு செலவு அதிகரித்ததாலும் தொடர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் உருவானது. அதனால், கூடுதலாக 4 கோடி ரூபாய் பெற்று பணி துவங்கியது. மேலும், பாதாள சாக்கடைக்காக குழி தோண்டும் போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதாலும், டெலிபோன் வயர்கள் அறுந்ததாலும் தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள முடியாமல் போனது. அதனால், பாதாள சாக்கடை பணி நான்காண்டுகளாக நீடித்து வருகிறது. நாமக்கல் நகரில் பாதாள சாக்கடை பணி கடந்த 2006ம் ஆண்டு துவங்கி பணிகளில் சுணக்கம் காணப்பட்டது தற்போது நகரில் 64 கி.மீ., தூரத்துக்கு குழிகள் தோண்டப்பட்டு, குழாய் பொறுத்தப்பட்டுள்ளது.நாமக்கல்லில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. விரைந்து முடித்து, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 07-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயற்பொறியாளர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 14-05-2010

திட்ட அறிக்கையின்படி நாமக்கல் நகராட்சியில் பதிக்கப்படவேண்டிய பாதாள சாக்கடைக்குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. கனேசபுரம் மற்றும் செம்பாளிக்காடு பகுதியில் தனியார் நிலங்கள் மற்றும் குழாய் பதிப்பதற்கான பாதை இல்லாமை ஆகிய காரணங்களால் பாதாள சாக்கடை குழாய்கள் பதிக்கும் பணி மேற்கொள்ள இயலவில்லை.நகராட்சி கேட்டுக்கொண்டதற்கிணங்க திட்டத்தில் இல்லாத தெருக்களில், தொழில்நுட்ப சாத்தியகூறுகளின்படி குழாங்கள் பதிக்கக்கூடிய தெருக்களில் பாதாள சாக்கடை குழாய்கள் பதிக்கும் பணி நடைப்பெற்று வலருகிறது. சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தொடங்கி நடைப்பெற்று வருகறது. ஒப்பந்தப்படி 03/2011 க்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு பின் நகராட்சியால் வீட்டிணைப்புகள் வழங்கப்பட்டு 05/2011 முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படத்துவங்கும் எனத்தெரிவிக்கப்படுகிறது




121 கோழிப்பண்ணை உடைந்த முட்டைகள் தொடர்பாக
கோழிப்பண்ணை உடைந்த முட்டைகள் தொடர்பாக TVNMK5590

Posted on : 07-05-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர் மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800 nalvinaiviswaraju@gmail.com.

பெறுநர் : மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல்

புகார் விவரம் : நாமக்கல் மாவட்டத்தில் கோழிப் பண்ணைகள் அதிகம் உள்ளதால் பண்ணைகளில் சேகரிக்கப்படும் உடைந்த முட்டைகளை குறைந்த விலைக்கு வாங்கி ஹோட்டல்கள், பேக்கரிகளில் பயன்படுத்துகின்ற்னர். உடைந்த முட்டைகளை இருப்பு செய்து பயன்படுத்தினால் அவற்றால் சுகாதாரக்கேடு ஏற்படும்.இத்தகைய முட்டைகளைப் பயன்படுத்தக் கூடாது. ஹோட்டல்கள், பேக்கரிகளில் உடைந்த முட்டைகளைப் பயன்படுத்த தடை செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 10-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக துணை இயக்குநர்(சுகாதார பணிகள்) நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.துணை இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 10-05-2010

மனுதாரரின் மனுமீது இவ்வலுவலக நேர்முக உதவியாளர் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் குழு ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் 10.05.2010 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு உடைந்த 500(எண்ணிக்கை) முட்டைகள் கைப்பற்றி அழிக்கப்பட்டது. மேலும் இதைப்போன்ற திடீர் ஆய்வுகள் அடிக்கடி மேற்கொள்ளப்படும் என்கிற விபரம் மனுதாரருக்குத் தெரிவிக்கப்படுகிறது.

Publish on : 10-05-2010

மனுதாரரின் மனுமீது இவ்வலுவலக நேர்முக உதவியாளர் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் குழு ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் 10.05.2010 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு உடைந்த 500(எண்ணிக்கை) முட்டைகள் கைப்பற்றி அழிக்கப்பட்டது. மேலும் இதைப்போன்ற திடீர் ஆய்வுகள் அடிக்கடி மேற்கொள்ளப்படும் என்கிற விபரம் மனுதாரருக்குத் தெரிவிக்கப்படுகிறது.

Publish on : 10-05-2010

மனுதாரரின் மனுமீது இவ்வலுவலக நேர்முக உதவியாளர் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் குழு ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் 10.05.2010 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு உடைந்த 500(எண்ணிக்கை) முட்டைகள் கைப்பற்றி அழிக்கப்பட்டது. மேலும் இதைப்போன்ற திடீர் ஆய்வுகள் அடிக்கடி மேற்கொள்ளப்படும் என்கிற விபரம் மனுதாரருக்குத் தெரிவிக்கப்படுகிறது. துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் நாமக்கல்.


122 .கொசவம்பட்டி ஏரி பாதுகாக்காத்தல் தொடர்பாக - TVNMK5546
கொசவம்பட்டி ஏரி பாதுகாக்காத்தல் தொடர்பாக - TVNMK5546
நாமக்கல்லை அடுத்துள்ள கொசவம்பட்டி ஏரியானது முட்புதர் மண்டி கொசு உற்பத்தி தொழிற்சாலையாக மாறிவருகிறது. இந்த ஏரியை தூர்வாரி செடி, கொடிகளை அகற்றி மழைநீரை தேக்கினால் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். கொசவம்பட்டி ஏரி சுற்றுப் பகுதி மக்களுக்கு தொற்று நோய் ஏற்படாமல் பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
Read Full Post »

Publish on : 04-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

________________________________________
Publish on : 07-05-2010
கொசவம்பட்டி ஏரி நாமக்கல் நகராட்சிக்கு உரியது.

________________________________________
Publish on : 21-05-2010
நாமக்கல் நகரில் அமைந்துள்ள கொசவம்பட்டி ஏரியானது நகரளவை ஆவணங்களில் சர்க்கார் புறம்போக்கு குளம் என வகைபாடு செய்யப்பட்டுள்ளது. எனவே நகராட்சி மூலம் சுத்தம் செய்ய இயலாது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


123 .எளச்சிபாளையம் தொடக்க கல்வி அலுவலகத்தில் பணியிடம் நிரப்ப கோருதல்TVNMK5488
எளச்சிபாளையம் தொடக்க கல்வி அலுவலகத்தில் பணியிடம் நிரப்ப கோருதல்TVNMK5488

Posted on : 19-04-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர் மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி, இராசிபுரம்

பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல் .

புகார் விவரம் : எலச்சிபாளையம் ஏ.இ.இ.ஓ., அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 20-04-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 29-04-2010

எலச்சிப்பாளையம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் மூன்று காலி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப இயக்குநர் அவர்களுக்கு பரிந்துரை செய்து விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.


124 .நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து திண்டுக்கல்,மதுரை வழித்தடத்தில் செல்லும் இரவு நேரப்பேருந்துகளில் வேலூர் மற்றும் கரூர் செல்லும் பயனிகளை ஏற
நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து இரவு 11.30 மணிக்கு ஒருஅரசு பேருந்து இயக்கப்படுகிறது. அதற்கு பிறகு நள்ளிரவு 12.50க்கு ஒரு கரூர் பேருந்து (பரமத்தி, வேலுர் வழியாக)இயக்கப்படுகிறது. இடைப்பட்ட நேரத்தில் மதுரை, திண்டுக்கல் செல்லும் பேருந்துகள் (சுமார் 5 அல்லது 6) வருகின்றன. இந்த பேருந்தில் வேலுர், கரூர் செல்லும் பயணிகள் ஏறினால் நடத்துனரால் கீழே இறக்கிவிடப்படுகின்றனர். கேட்டால் வேலுர், கரூர் பேருந்து செல்லாது எனவும் (வேலுர்,கரூர் ஒரு வழிதடமாக இருந்தும்), நேராக பைபாஸ் சாலையில் செல்கிறது எனவும் தெரிவிக்கின்றனர். அதனால் கரூர் மற்றும வேலுர் செல்லும் பயணிகள் மிகவும் சிரமப்படுவதுடன் பணி முடித்து வீடு திரும்பும் நபர்கள், வெளியூர் சென்று வரும் பயணிகள் பேருந்து இல்லாமல் சுமார் 1.25 இரவு நேரத்தில் காத்திருக்க நேரிடுகிறது. ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்தை இணைக்கும் இந்த வழித்தடத்தில் பொதுமக்களின் நலன் கருதி இரவு நேரத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் நடத்துனர் மற்றும் ஓட்டுநரின் சவுரியத்திற்காக இயக்கப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், பேருந்தில் இருக்கைகள் காலியாக இருந்தும் பயணிகளை ஏற்றாமல் மதுரை, திண்டுக்கல் செல்லும் பேருந்துகள் செல்வதால் அரசுக்கு நிதியிழப்பும் ஏற்படுகிறது. மதுரை நேரம் காப்பாளர் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டால், அவர்களின் அறிவுரைகளின் பேரில் ஒரு சில நாட்கள் மட்டும் பேருந்து உரிய வழிதடத்தில் செல்லும், இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் பைபாஸ் சாலையிலேயே செல்கிறது. நீண்ட வருடமாக உள்ள இந்த பிரச்சனையை தீர்வு காண ஸ்தல ஆய்வு செய்து இரவு 12.10 மணியளவில் ஒரு அரசு பேருந்தை நாமக்கல் பணிமனையில் இருந்து கரூர் இயக்க அய்யா அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 30-04-2010


Publish on : 14-05-2010

நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து திண்டுக்கல்,மதுரை வழித்தடத்தில் செல்லும் இரவு நேரப்பேருந்துகளில் வேலூர் மற்றும் கரூர் செல்லும் பயனிகளை ஏற்றி செல்ல ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.




125 அத்தனூரில் உர ஆலை அமைக்க எதிர்ப்பு
அத்தனூரில் உர ஆலை அமைக்க எதிர்ப்பு TVNMK5589

Posted on : 07-05-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர் மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800 nalvinaiviswaraju@gmail.com

பெறுநர் : மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல்

புகார் விவரம் : நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 15வது வார்டு தாசன்புதூர் என்ற இடத்தில் ஜெர்மன் டிரேடிங் கார்ப்பரேசன் என்ற ராசாயன உரத் தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆலை அமையும் இடத்தை சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம் உள்ளது. எனவே, இங்கு உர ஆலை அமைந்தால் விவசாய நிலம் மற்றும் நிலத்தடிநீர் கடுமையாக பாதிக்கப்படும். ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உரத்தொழிற்சாலை கட்டுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக அத்தனூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நிறைவேற்றிய தீர்மானமும் பொதுமக்கள் எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டது. அதுகுறித்த விபரம் அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உர தொழிற்சாலை கட்ட டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் மீண்டும் அனுமதி வழங்குவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. உரத்தொழிற்சாலை கட்டுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக அத்தனூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நிறைவேற்றிய தீர்மானத்தினை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 10-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட சுற்று சூழல் பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 12-05-2010

இராசிபுரம் வட்டம் அத்தனூர் கிராமத்தில் ஜெர்மன் டிரேடிங் கார்ப்பரேசன் என்ற நிறுவனத்திற்கு குருணை வடிவ கலப்பு உரம் தயாரிக்க தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம் தொழிற்சாலை நிறுவுவதற்கான இசைவபணையை 16.02.2007 ல் வழங்கியுள்ளது. இதை எதிர்த்து திரு.முத்துசாமி என்பவரால் மேல்முறையீடு செய்யப்பட்டு மேல்முறையீட்டு ஆணையம், வாரியம் வழங்கிய இணைவாணை சரியானதே என தீரப்பளித்து உள்ளது. இந்த ஆலை விவசாய தேவைகளுக்காக உரங்களை தயாரிக்கும் தொழிற்சாலை ஆகும். இதன் உற்பத்தியின்போது கழிவு நீர் ஏதும் வெளியேற்றப்படாது. இதன் அடுப்பு மற்றும் உற்பத்தி பகுதியில் உரிய மாசுத்தடுப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு காற்று மாசு அடைவது தடுக்கப்பட்டு விடும். எனவே இத்தொழிற்சாலை இயக்கத்தினால் நிலத்தடி நீரோ சுற்றுச்சூழலோ பாதிப்பு அடைவது இல்லை. உரத்தொழிற்சாலை கட்டுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, அத்தனூர் பேரூராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தினை ரத்து செய்வது தொடர்பாக இவ்வாரியத்தில் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதையும் தெரிவிக்கப்படுகிறது.

Publish on : 14-05-2010

இராசிபுரம் வட்டம் அத்தனூர் கிராமத்தில் ஜெர்மன் டிரேடிங் கார்ப்பரேசன் என்ற நிறுவனத்திற்கு குருணை வடிவ கலப்பு உரம் தயாரிக்க தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம் தொழிற்சாலை நிறுவுவதற்கான இசைவபணையை 16.02.2007 ல் வழங்கியுள்ளது. இதை எதிர்த்து திரு.முத்துசாமி என்பவரால் மேல்முறையீடு செய்யப்பட்டு மேல்முறையீட்டு ஆணையம், வாரியம் வழங்கிய இணைவாணை சரியானதே என தீரப்பளித்து உள்ளது. இந்த ஆலை விவசாய தேவைகளுக்காக உரங்களை தயாரிக்கும் தொழிற்சாலை ஆகும். இதன் உற்பத்தியின்போது கழிவு நீர் ஏதும் வெளியேற்றப்படாது. இதன் அடுப்பு மற்றும் உற்பத்தி பகுதியில் உரிய மாசுத்தடுப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு காற்று மாசு அடைவது தடுக்கப்பட்டு விடும். எனவே இத்தொழிற்சாலை இயக்கத்தினால் நிலத்தடி நீரோ சுற்றுச்சூழலோ பாதிப்பு அடைவது இல்லை. உரத்தொழிற்சாலை கட்டுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, அத்தனூர் பேரூராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தினை ரத்து செய்வது தொடர்பாக இவ்வாரியத்தில் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதையும் தெரிவிக்கப்படுகிறது.






126


127
TVNMK2351

128 ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் எல்ஐசி சந்தா தொகை, அஞ்சலக சேமிப்பு, கூட்டுரவு சிக்கன நாணயச் சங்க கடன் ஆகியவற்றை இசிஎஸ் மூலம் பிடித்தம் செய்ய TVNMK2346

ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் எல்ஐசி சந்தா தொகை, அஞ்சலக சேமிப்பு, கூட்டுரவு சிக்கன நாணயச் சங்க கடன் ஆகியவற்றை இசிஎஸ் மூலம் பிடித்தம் செய்ய TVNMK2346

Posted on : 29-03-2010

புகார் விவரம் : அனுப்புநர்: . நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் – 637408 செல்:9443275800 nalvinaiviswaraju@gmail.com பெறுநர்: மாவட்ட ஆட்சியர், நாமக்கல் . ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் எல்ஐசி சந்தா தொகை, அஞ்சலக சேமிப்பு, கூட்டுரவு சிக்கன நாணயச் சங்க கடன் ஆகியவற்றை இசிஎஸ் மூலம் பிடித்தம் செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலர்களும் இத்தகைய நடைமுறையைப் பின்பற்ற மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 29-03-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 13-05-2010

இ.சி.எஸ் மூலம் பிடித்தம் செய்ய அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்குள் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


129 .லாரி தொழில் சார்ந்த பட்டறைகளை ஒருங்கிணைத்து தொழிற்பேட்டை - TVNMK5592
. லாரி தொழில் சார்ந்த பட்டறைகளை ஒருங்கிணைத்து தொழிற்பேட்டை - TVNMK5592
நாமக்கல் நகரை சுகாதாரமிக்க, சுற்றுச்சூழல் மாசு இல்லாத, இரைச்சல் இல்லாத அமைதியான நகரமாக மாற்ற வேண்டுமெனில் லாரித் தொழில் தொடர்பான பட்டறைகளை ஒரே இடத்தில் அமைக்க வேண்டும். லாரி பாடி கட்டுவதற்கான கூடம், ஒர்க் ஷாப், பெயிண்டிங் பட்டறை, மர அறுவை கூடங்கள், வெல்டிங் பட்டறை, லேத் ஒர்க்ஸ் என ஒவ்வொரு தொழிலும் ஒருபகுதியில் உள்ளதால் நகர மக்களுக்கு அமைதியற்ற சூழலும், இரைச்சலால் ஒலி மாசும் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க புறநகர்ப் பகுதியில் தொழில்பேட்டை ஏற்படுத்தி லாரி தொடர்பான அனைத்து கூடங்களும் ஒரே இடத்தில் அமைக்க வேண்டும். இதற்கான திட்ட வரைவை அரசுக்கு தயாரித்து அனுப்ப லாரித் தொழில் சார்ந்த பட்டறைகளை ஒருங்கிணைத்து தொழிற்பேட்டை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Read Full Post »


லாரி தொழில் சார்ந்த பட்டறைகளை ஒருங்கிணைத்து தொழிற்பேட்டை

Publish on : 10-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பொது மேலாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 20-05-2010

நாமக்கல் நகரில் உள்ள லாரி சார்ந்த தொழில் பட்டறைகள் நகருக்கு வெளியில் அமைப்பதற்காக நாமக்கல் லாரி பாடி பில்டோ்ஸ் அசோசிஸன் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆட்டோ நகர் என்ற பெயரில் ஒரு நகர் அமைத்து அதில் ஒவ்வொருவருக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தகுந்த கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது நாமக்கல் பரமத்தி பைபாஸ் சாலையின் அருகில் வள்ளிபுரம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒதுக்கீடு பெற்றவர்கள் தொழிற்சாலைகள் ஆரம்பிக்க இன்னும் எவரும் முன் வரவில்லை. அனைவரும் ஒதுக்கப்பட்ட இடங்களில் விரைவி்ல் தொழிற்சாலைகள் அமைத்துக் கொண்டு ஆட்டோ நகர் பகுதியிலேயே ஒருங்கிணந்து செயல்படுவார்கள் என்று தெரிவித்து கொள்ளப்படுகிறது.

Publish on : 25-05-2010

நாமக்கல் நகரில் உள்ள லாரி சார்ந்த தொழில் பட்டறைகள் நகருக்கு வெளியில் அமைப்பதற்காக நாமக்கல் லாரி பாடி பில்டோ்ஸ் அசோசிஸன் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆட்டோ நகர் என்ற பெயரில் ஒரு நகர் அமைத்து அதில் ஒவ்வொருவருக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தகுந்த கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது நாமக்கல் பரமத்தி பைபாஸ் சாலையின் அருகில் வள்ளிபுரம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒதுக்கீடு பெற்றவர்கள் தொழிற்சாலைகள் ஆரம்பிக்க இன்னும் எவரும் முன் வரவில்லை. அனைவரும் ஒதுக்கப்பட்ட இடங்களில் விரைவி்ல் தொழிற்சாலைகள் அமைத்துக் கொண்டு ஆட்டோ நகர் பகுதியிலேயே ஒருங்கிணந்து செயல்படுவார்கள் என்று தெரிவித்து கொள்ளப்படுகிறது.

130 துவக்கப்பள்ளிகள் ஆசிரிய, ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் வெளியிடுவதில் காலதாமதம் TVNMK2113
துவக்கப்பள்ளிகள் ஆசிரிய, ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் வெளியிடுவதில் காலதாமதம் TVNMK2113

Posted on : 11-03-2010

புகார் விவரம் :

அனுப்புநர்: . நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர் மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் – 637408 செல்:9443275800

பெறுநர்: மாவட்ட ஆட்சியர், நாமக்கல் .
துவக்கப்பள்ளிகள் ஆசிரிய, ஆசிரியர் நியமனம், பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து பணிகளும் அந்தந்த மாவட்ட தொடக்க அலுவலர் மூலம் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதத்தில் துவக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்வு, சீனியாரிட்டி பட்டியல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மூலம் தயார் செய்து ஜனவரி 1ம் தேதி வெளியிடப்படுவது வழக்கம். இந்நிலையில் இரண்டு மாதங்களைக் கடந்தும் இதுவரை ஆசிரியர்களின் பதவி உயர்வு, சீனியாரிட்டி குறித்த பட்டியல் வெளியிடப்படாமல் உள்ளது. இப்பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதால் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஆசிரியர் இடமாறுதல் குறித்த கவுன்சிலிங் நடப்பதில் சிக்கல் உருவாகும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதத்தில் துவக்கப் பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்வு, பணி மூப்பு குறித்து பட்டியல் தயார் செய்யப்படும். அப்பட்டியல் அதிகபட்சம் பிப்ரவரி மாதத்திற்குள் ஜனவரி 1ம் தேதியிட்டு வெளியிடப்படும். அப்பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும். இந்நிலையில் இந்தாண்டு இதுவரை பதவி உயர்வு, பணி மூப்பு குறித்த பட்டியல் வெளியிடப்படாமல் உள்ளது. இப்பட்டியல் வெளியிடுவதில் ஏற்படும் தாமதத்தால் காலியாக உள்ள பணியிடங்களில் ஆசிரியர்கள் நேரடி நியமனம் மற்றும் இடமாறுதல் மூலம் நியமனம் செய்யவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு நேர்ந்தால் பதவி உயர்வை எதிர்பார்த்து பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர். தவறுகள் நடக்கவும் அதிக வாய்ப்புள்ளது. இப்பட்டியல் அனைத்துக்கும் அடிப்படை என்பதால், இது வெளியிடுவதில் ஏற்படும் காலதாமதத்தால், இடமாறுதல் தொடர்பான கவுன்சிலிங்கும் தள்ளிப்போக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் தற்போது நிலவி வரும் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட உரிய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 13-05-2010

தற்பொழுது பணிமூப்பு பட்டியலில் உள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு விபரங்கள் அனைத்தும் முடிவுற்ற பிறகு தொடக்க கல்வி இயக்குநரால் விரைவில் வெளியிடப்படும்.






131 திருச்செங்கோடு - நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் - TVNMK5542
திருச்செங்கோடு - நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் - TVNMK5542
திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ளது பெரிய தெப்பக்குளம். இந்த தெப்பக்குளம் சுற்றுவட்டாரத்தில் உள்ள சூரியம்பாளையம், சாணார்பாளையம், தொண்டிக்கரடு, சட்டையம்புதூர் பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. பெரிய தெப்பக்குளம் அருகில் உள்ள நிலத்திலிருந்து தனியார் பள்ளிக்குச் சொந்தமான லாரிகள் தண்ணீர் எடுத்துச் சென்றன. இதனால் இப்பகுதியில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
Read Full Post »
மனு விவரம்
நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவது தொடர்பாக.

Publish on : 03-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் திருச்செங்கோடு நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 18-05-2010

மனுவில் குறிப்பிட்டுள்ள அம்மன்குளத்தில் ஏற்கனவே தூர்வாரப்பட்டு குளத்தை சுற்றிலும் கம்பிவேலி அமைத்து நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கோடைமழை பொய்த்து விட்டதால் வறட்சியாக உள்ளதாலும் குளத்தில் போதிய தண்ணீர் இல்லை. அம்மன் போதுமான ஆழம் உள்ளதால் தற்போதைக்கு தூர்வாரும் அவசியம் ஏற்படவில்லை என்பதை மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.







132




133 .அனுமதி பெற்ற பள்ளிகளின் பட்டியலை வெளியிட - TVNMK5539
அனுமதி பெற்ற பள்ளிகளின் பட்டியலை வெளியிட - TVNMK5539
நாமக்கல் நகரிலும் நாமக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏராளமான மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் துவங்கப்பட்டு வருகின்றன. ஆங்கில மொழி வழியிலான கல்விக் கூடங்களாக தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் இப் பள்ளிகள் அரசு அனுமதி பெற்று இயங்குகின்றனவா, அனுமதி பெறாமலேயே பள்ளிகள் உள்ளதா என பொதுமக்களிடையே மிகுந்த குழப்பம் உள்ளது. மேலும், தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் சூழலில், அனுமதி பெறாத பள்ளிகளில் மாணவர்களை சேர்த்து பெற்றோர் ஏமாற நேரிடலாம். எனவே, அனுமதி பெற்ற பள்ளிகளின் பட்டியலை வெளியிட மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
Read Full Post »
Publish on : 03-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக முதன்மை கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்






134-143 not fount
144 ராசிபுரம் நகராட்சி பகுதியில் காலாவதி பொருள் விற்பனையை ஒழிக்க முறையாக ஆய்வுகள் செய்ய TVNMK5624
ராசிபுரம் நகராட்சி பகுதியில் காலாவதி பொருள் விற்பனையை ஒழிக்க முறையாக ஆய்வுகள் செய்ய TVNMK5624

Posted on : 10-05-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர்மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800 nalvinaiviswaraju@gmail.com.

பெறுநர் : மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல்

புகார் விவரம் : ராசிபுரத்தில் உள்ள மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு முறையாக நடைபெறாத காரணத்தால் காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டு கின்றனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், ``ராசிபுரம் நகராட்சி முழுவதும் அதிகாரிகள் ஆய்வு மேற் கொள்ள வில்லை. இதன் காரணமாக இங்குள்ள பெரும்பாலான கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உதாரணமாக, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பாளரின் முகவரி உள்ளிட்ட விபரங்கள் இல்லாத ரஸ்னா, தண்ணீர், மோர் பாக்கெட்டுகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இதை வாங்கி பருகுபவர்கள் பல்வேறு விதமான உடல் உபாதைகளுக்கு ஆளாகி அவதிப்படுகின்றனர். உணவகங்கள், விடுதிகளில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப் பட்டு வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுகிறது. மக்களுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படுவதற்கு முன், இதை தடுக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ராசிபுரம் நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட், உணவகங்கள், விடுதிகளில் முறையாக சோதனை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 11-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக துணை இயக்குநர்(சுகாதார பணிகள்) நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.துணை இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 13-05-2010

ந.க.எண்.1311/அ5/2010 நாள்: 13.05.2010 தொடுவானம் கணினி மனு நாள் 10.05.2010 தொடுவானம் மனுவின் பொருள் ஆணையாளர், நகராட்சி, இராசிபுரம் அலுவலக கட்டுப்பாட்டிற்குள் வருவதால் இம்மனுவினை மேற்சொன்ன அலுவலகத்திற்கு அனுப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனுப்புநர் துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள், நாமக்கல்.

Publish on : 13-05-2010

ந.க.எண்.1311/அ5/2010 நாள்: 13.05.2010 தொடுவானம் கணினி மனு நாள் 10.05.2010 தொடுவானம் மனுவின் பொருள் ஆணையாளர், நகராட்சி, இராசிபுரம் அலுவலக கட்டுப்பாட்டிற்குள் வருவதால் இம்மனுவினை மேற்சொன்ன அலுவலகத்திற்கு அனுப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனுப்புநர் துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள், நாமக்கல்.




Publish on : 27-05-2010

இராசிபுரம் நகராட்சியில் உள்ள சூப்பர் மார்க்கெட், மளிகை கடை, டிபார்ட்மென்ட் ஸ்டோர் உணவகங்கள் இறைச்சி கடைகள் ஆகியவற்றில் அவ்வப்பொழுது திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் காலாவதி தேதி குறிப்பிடப்படாத, காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது. மேலும் இப்பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.





ராசிபுரம் நகராட்சி பகுதியில் காலாவதி பொருள் விற்பனையை ஒழிக்க முறையாக ஆய்வுகள் செய்ய

Publish on : 11-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக துணை இயக்குநர்(சுகாதார பணிகள்) நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.துணை இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 13-05-2010

ந.க.எண்.1311/அ5/2010 நாள்: 13.05.2010 தொடுவானம் கணினி மனு நாள் 10.05.2010 தொடுவானம் மனுவின் பொருள் ஆணையாளர், நகராட்சி, இராசிபுரம் அலுவலக கட்டுப்பாட்டிற்குள் வருவதால் இம்மனுவினை மேற்சொன்ன அலுவலகத்திற்கு அனுப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனுப்புநர் துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள், நாமக்கல்.

Publish on : 13-05-2010

ந.க.எண்.1311/அ5/2010 நாள்: 13.05.2010 தொடுவானம் கணினி மனு நாள் 10.05.2010 தொடுவானம் மனுவின் பொருள் ஆணையாளர், நகராட்சி, இராசிபுரம் அலுவலக கட்டுப்பாட்டிற்குள் வருவதால் இம்மனுவினை மேற்சொன்ன அலுவலகத்திற்கு அனுப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனுப்புநர் துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள், நாமக்கல்.

Publish on : 27-05-2010

இராசிபுரம் நகராட்சியில் உள்ள சூப்பர் மார்க்கெட், மளிகை கடை, டிபார்ட்மென்ட் ஸ்டோர் உணவகங்கள் இறைச்சி கடைகள் ஆகியவற்றில் அவ்வப்பொழுது திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் காலாவதி தேதி குறிப்பிடப்படாத, காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது. மேலும் இப்பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.



145 பள்ளி மாணவர்களுக்கு இலவச ஆங்கில அகராதி - TVNMK5617
பள்ளி மாணவர்களுக்கு இலவச ஆங்கில அகராதி - TVNMK5617
தொடக்க கல்வித்துறையில் 6, 7, 8ம் வகுப்பு படிக்கும் எஸ்.சி, எஸ்.டி. மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் ஆங்கிலத்தை எளிமையாக கற்கும் வகையில் இலவசமாக ஆங்கில அகராதி வழங்க அரசு உத்தரவிட்டது. இதற்காக அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டது. ஆங்கில அகராதி தயாரிக்கும் பணியை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மேற்கொண்டது. இந்த அகராதியில் ஆங்கிலம்&ஆங்கிலம்&தமிழ் என்றவாறு வார்த்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தை எளிமையாக உச்சரிக்கும் வகையில் தமிழில் உச்சரிப்பு வார்த்தைகள் தரப்பட்டுள்ளன. ஆங்கில அகராதிகள் அந்தந்த மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்திற்கு வந்துள்ளன. பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!
Read Full Post »


மனு விவரம்
பள்ளி மாணவர்களுக்கு இலவச ஆங்கில அகராதி

Publish on : 10-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக முதன்மை கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 28-05-2010

உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்கம் மாநில திட்ட இயக்குந்ர் அவர்களின் உத்தரவுபடி நாமக்கல் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 2009*10 கல்வியாண்டில் 8 ஆம் வகுப்பு மாணவிகள் 4444 பேருக்கு வாழ்வியல் திறன் பயிற்சி அளிக்கவும் அப்பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு ஆங்கிலஅகராதிகள் தலா ஒன்று தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மூலம் பெற்று வழங்கப்படவேண்டும் என் உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி மேற்காண் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.மேலும் ரூ.6,66,600 செலவில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மூலம் 4444 ஆங்கில அகராதிகள் பெறப்பட்டு அம்மாணவிகளுக்கு வழங்கும் பொருட்டு அனைத்து வட்டார வள மையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.வழங்குதல் தொடர்பாக மாநில திட்ட இயக்குநரின் உத்தரவு பெறப்பட்டவுடன் அகராதிகள் வழங்க்கப்படும் என்பதையும் பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன் . கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் , அனைவ‌ருக்கும் க‌ல்வி இய‌க்க‌ம் , நாம‌க்க‌ல் மாவ‌ட்ட‌ம்.


146 .மாணவர்களின் நலன் கருதி பள்ளி வளாகத்திற்குள் இருக்கும் மின்கம்பம் தொடர்பாக - TVNMK5619
மாணவர்களின் நலன் கருதி பள்ளி வளாகத்திற்குள் இருக்கும் மின்கம்பம் தொடர்பாக - TVNMK5619
திருச்செங்கோடு சாணார்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 320 மாணவ&மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 4 பெண் ஆசிரியைகள் உள்பட 8 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இப்பள்ளி வளாகத்திற்குள் அங்கன்வாடி மையமும் உள்ளது. இந்த பள்ளியின் சுற்றுச் சுவருக்குள் உயர் அழுத்த மின்கம்பம் அமைக்கப்பட்டு மின்விநியோகம் செய்யப் படுகிறது. இந்த மின்கம்பத்தில் உள்ள மின் கம்பிகள் சில நேரங்களில் அறுந்து விழுந்து விடுகின்றன. இதன் காரணமாகவும், மாணவர்கள் விளையாடும் நேரத்தில் மின்கம்பிகள் மீது பந்துகள் படுவதாலும் அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. மாணவர்களின் நலன்கருதி இந்த மின்கம்பத்தை வேறிடத்திற்கு மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை கோரி மனு செய்யப் பட்டது Publish on : 24-04-2010 தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக கண்காணிப்பு பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கண்காணிப்பு பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல் ________________________________________ Publish on : 30-04-2010 புகார் மனுவில் குறிப்பிட்ட பள்ளியின் விபரம் தெரிவிக்கப்பட்டால் வாரிய விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.என்ரு பதில் சொல்லப்பட்டுள்ளது "திருச்செங்கோடு சாணார்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில்" என்ரு பள்ளி பெயர் குறிப்பிட்டு உள்ள நிலையில் புகார் மனுவில் குறிப்பிட்ட பள்ளியின் விபரம் தெரிவிக்கப்பட்டால் வாரிய விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப் பட்டது மீது மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Read Full Post »




மாணவர்களின் நலன் கருதி பள்ளி வளாகத்திற்குள் இருக்கும் மின்கம்பம் தொடர்பாக

Publish on : 11-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக கண்காணிப்பு பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கண்காணிப்பு பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 18-05-2010

மேற்படி இடத்தில் உள்ள மின்கம்பங்களை அகற்ற ஆகும் மதிப்பீட்டு தொகையை செலுத்த சம்மதக் கடிதத்துடன் விண்ணப்பத்தை இளநிலை பொறியாளர் இ.ப தெற்கு திருச்செங்கோடு அலுவலகத்தில் அளிக்க பள்ளி நிர்வாகத்திற்கு அறிவிப்பு கடிதம் மின்வாhpய அலுவலகம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் பள்ளி நிh;வாகத்திடமிருந்து இதுவரையில் இம்மாதிரியான விண்ணப்பம் ஏதும் மேற்படி அலுவலகத்தில் பெறப்படவில்லை. இருப்பினும் மின்வாhpயம் மூலம் மதிப்பீடு தயார் செய்து அதன் தொகையை பள்ளி நிர்வாகத்திடம் பெற மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவ்வாறான தொகை கிடைக்க பெற்றவுடன் உடன் சுட்டிகாட்டபட்ட குறைகள் நிவர்த்தி செய்யபட்டு விடும் என்பதை இதன் மூலம் தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


147-149 not fount

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக