செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

இராசிபுரம் - சேலம் செல்வதற்கு இராசிபுரத்தில் அரசு பஸ்கள் ஒரு வழியிலும் தனியார் பஸ்கள் ஒரு வழியிலும் செல்கின்றது.

இராசிபுரம் to சேலம் செல்வதற்கு இராசிபுரத்தில் அரசு பஸ்கள் ஒரு வழியிலும் தனியார் பஸ்கள் ஒரு வழியிலும் செல்கின்றது.
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



5. இராசிபுரம் to சேலம் செல்வதற்கு இராசிபுரத்தில் அரசு பஸ்கள் ஒரு வழியிலும் தனியார் பஸ்கள் ஒரு வழியிலும் செல்கின்றது.
- TVNMK 1269

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
இராசிபுரம் to சேலம் செல்வதற்கு இராசிபுரத்தில் அரசு பஸ்கள் ஒரு வழியிலும் தனியார் பஸ்கள் ஒரு வழியிலும் செல்கின்றது.அதனால், இராசிபுரம் to சேலம் செல்லும் பயணிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர், அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலர்கள் என பலரும் அவதிப்படுகின்றனர். எனவே,மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


மனு விவரம்


Publish on: 19-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக இராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளருக்கு நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

Publish on: 08-03-2010

இப்புகார் மனுவில் தெரிவிக்கப்பட்ட பொருள் தொடர்பாக இராசிபுரம் முதல் சேலம் செல்லும் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இவ்வலுவலக களப்பணியாளர்களால் நாள்தோறும் ஆய்வு செய்யப்பட்டு அனுமதிக்கு புறம்பாக இயக்கப்படும் பேருந்துகளின்மீது தணிக்கை அறிக்கை வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தற்போது மேற்கண்ட வழித்தடத்தில் அனைத்து பேருந்துகளும் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும், தொடர்ந்து பேருந்துகளின் இயக்கம் குறித்து களப்பணியாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது என்பைதையும் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக