தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....

12. குழந்தைகளின் நலன் கருதி சத்துணவுக்கூடம் - TVNMK 1631
அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் . திருச்செங்கோட்டில் உள்ள நகராட்சி 25வது வார்டு பகுதியில் சத்துணவுக்கூடம் இல்லை. அங்கன்வாடி குழந்தைகள் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. குழந்தைகளின் நலன் கருதி சத்துணவுக்கூடம் அமைத்து தரவேண்டும்
மனு விவரம்
குழந்தைகளின் நலன் கருதி சத்துணவுக்கூடம்

Publish on: 01-03-2010
தங்களின் மனு தக்க நடவடிக்கைக்காக நேர்முக உதவியாளர் (பொது) சத்துணவு திட்ட நியமனம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நோ்முக உதவியாளரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on: 22-03-2010
திருச்செங்கோடு நகரம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலரால் தல தணிக்கை மேற்கொண்டு 24 மற்றும் 25வது வார்டு குழந்தைகள் அனைவரும் மலையடிவாரம் -1 அங்கன்வாடி மையம் மூலமாக பயனடைந்து வருவதாகவும் 25து வார்டுக்கென தனி மையம் துவங்க இயலாது என குறிப்பிட்டுள்ளார். எனவே குழந்தைகள் எவரும் 1கி.மீ தூரம் நடந்து செல்லவில்லை என்பதால் 25வது வார்டுக்கென புதிய மையம் துவங்க இயலாது என்பதை மனுதாரருக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக