திங்கள், 16 ஆகஸ்ட், 2010

1-50

1-50 ok

Reply ok

1.நாமக்கல் நகரின் பல பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாததால்...குழிகள் சரிவர மூடப்படாத சாலைகள் - TVNMK1329

1. நாமக்கல் நகரின் பல பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாததால்...குழிகள் சரிவர மூடப்படாத சாலைகள் - TVNMK1329

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில செயலாளர்
தமிழக மாணவர் சங்கம் (பா.ம.க)
8.கச்சேரி தெரு
இராசிபுரம்_ 637408 .
9443275800
பெறுநர்:
திரு,மாவட்ட ஆட்சியர் அவர்கள்
நாமக்கல்
நாமக்கல் நகரின் பல பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாததால் சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. புதிய சாலை அமைக்கும் வரை பழுதடைந்த சாலைகளை செப்பனிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!


Read Full Post »

மனு விவரம்
குழிகள் சரிவர மூடப்படாத சாலைகள்

Publish on : 22-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் நகராட்சி ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 23-02-2010

நாமக்கல் நகரில் பாதாள சாக்கடை திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இப்பணியில் 60 கிமீ. நீளமுள்ள சாலைகள் தோண்டப்பட்டு பாதாள சாக்கடை திட்டப்பணி செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக சாலை மேம்பாட்டு நிதியில் இருந்து கோ ஆப்ரேட்டிவ் காலனி, 1 மற்றும் 2 வது தெருக்கள், கலைவாணி நகர், திருநகர் மெயின் ரோடு ரோட்டரி உறால் தெரு, திருநகர் குறுக்கு தெருக்கள், இந்திரா நகர் மெயின் ரோடு மற்றும் குறுக்கு தெருக்கள், பரணி நகர், டீச்சர்ஸ் காலனி ஆகிய இடங்களில் 8.30 கி.மீ நீளமுள்ள சாலைகள் செப்பனிடப்பட்டு தார் சலைகளாக மாற்றம் செய்யப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் 12 வது நிதிக்குழு 2008 2009 ம் ஆணடு நிதியில் ஏ.எஸ்.பேட்டை மெயின் ரோடு மற்றும் குறுக்கு தெரு சாலைகள் 1.20 கி.மீ நீளம் செப்பனிடப்பட்டு தார் சாலையாக அமைக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. மொத்தம் 9.20 கி.மீ. நீளம் சாலை செப்பனிடப்பட்டுவிட்டது. மேலும் 12 வது நிதிக்குழு மானியம் 2009 2010 ஆண்டின் கீழ் ஆர்.பி.புதுர் மெயின் ரோடு பணி 0.500 கி.மீ நீளம் தேர்வு செய்யப்பட்டு பணி உத்திரவு ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பணியில் குடிநீர் பிரதான குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவுற்றதும் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் எனப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தற்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் பாதாள சாக்கடை திட்டத்திற்கு என தோண்டப்பட்ட சாலைகளை மேடு பள்ளங்களை கிராவல் மண் கொண்டு மட்டப்படுத்தி சரி செய்யும் பணி மேற்கொண்டு வருகின்றனர். இப்பணியை விரைவில் முடித்து தருவதாக நிர்வாக பொறியாளர், தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம், நாமக்கல் அவர்கள் உறுதி அளித்துள்ளார்கள். மேலும் நகரில் மீதம் உள்ள சாலைகளை செப்பனிட நகராட்சி நிர்வாக ஆணையர் அவர்களுக்கு கருத்துரு ரூ.28.52 கோடிக்கு தயார் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைக்கப்பெற்றவுடன் பணி விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

2. நாமக்கல் புதிய பேருந்துநிலையம்


நாமக்கல் புதிய பேருந்துநிலையம் - TVNMK 1334

அனுப்புநர்: ,
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில செயலாளர்
தமிழக மாணவர் சங்கம் (பா.ம.க)
8.கச்சேரி தெரு
இராசிபுரம்_ 637408 .
9443275800
பெறுநர்:
திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்
நாமக்கல்
நாமக்கல் பேருந்து நிலையம் இடநெருக்கடியால் நாளுக்கு, நாள் திணறி வருகிறது.எனவே, தற்போதுள்ள பேருந்து நிலையத்தை நகரப் பேருந்து நிலையமாக மாற்றம் செய்து, நகருக்கு வெளியே புதிய பேருந்துநிலையம் கட்டித்தர மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!



மனு விவரம்
நாமக்கல் புதிய பேருந்துநிலையம்

Publish on: 22-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்ககைக்காக நாமக்கல் நகராட்சி ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

: Publish on 23-02-2010

நாமக்கல் நகராட்சி பேருந்து நிலையம் இடநெருக்கடியாக உள்ளது என்பதாலும், வளர்ந்து வரும் நகர வளர்ச்சிக்கும் , பெருகி வரும் வாகனப்போக்குவரத்திற்கும், எதிர்கால தேவைக்கும் போதாது என்பதைக்கருத்தில் கொண்டு புதிய பேருந்து நிலையம் அமைக்க நகராட்சி எல்லைக்குள் தகுதியான இடம் இல்லை என்பதால் நகராட்சியை சுற்றியுள்ள கிராம பகுதிகளை நகராட்சியுடன் இணைத்து நகராட்சி எல்லையை விரிவுபடுத்தி நகருக்கு வெளியே பேருந்து நிலையம் அமைக்க நகர்மன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கருத்துரு பரிசீலனையில் இருந்து வருகிறது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

3. நாமக்கல் பேருந்து நிலையப்பகுதியில் கூட்டுறவு மருந்துக் கடைக்கு கடையோ, இடமோ ஒதுக்கித்தர- TVNMK 1339





நாமக்கல் பேருந்து நிலையப்பகுதியில் கூட்டுறவு மருந்துக் கடைக்கு கடையோ, இடமோ ஒதுக்கித்தர- TVNMK 1339

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில செயலாளர்
தமிழக மாணவர் சங்கம் (பா.ம.க)
8.கச்சேரி தெரு
இராசிபுரம்_ 637408
9443275800
பெறுநர்:
திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்
நாமக்கல்
நாமக்கல்லில் நிறுவப்பட்டுள்ள கூட்டுறவு மருந்துக் கடையில் அனைத்து மருந்துகளும் 15 சதம் தள்ளுபடியில் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த கடை நகரின் மையப் பகுதியில் இல்லாததால் பொதுமக்களால் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளமுடியவில்லை. நாமக்கல் பேருந்து நிலையப்பகுதியில் கூட்டுறவு மருந்துக் கடைக்கு கடையோ, இடமோ ஒதுக்கித்தர மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!


மனு விவரம்

Publish on: 22-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் மாவட்ட இணைப்பதிவாளர் கூட்டுறவுத்துறை அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இணைப்பதிவாளரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on: 26-02-2010

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மூலம் பொதுமக்களுக்கு தரமானதாகவும் விலை குறைவாகவும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மருந்துகடை ஆரம்பிக்கப்பட்டது. பேரூந்து நிலைய பகுதியில் ஆறுமாத காலமாக கட்டிடமோ, இடமோ கிடைக்கவில்லை. இந்நிலையில் சங்கத்திலேயே திருச்செங்கோடு மெயின்ரோட்டில் ஆரம்பித்து அதிகபட்ச விலையில் 15 தள்ளுபடி செய்து விற்பனை செய்து வருகிறோம். விரைவில் பேரூந்து நிலைப்பகுதியில் மருந்துகடைக்கு கட்டிடம் கிடைக்கப் பெற்றதும் பேரூந்து நிலையப்பகுதியிலேயே செயல்படுத்துகிறோம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்பதை மனுதாரர்க்கு தெரிவிக்கப்பட்டது.

4. ராசிபுரம் பழைய பேருந்து நிலைய சங்கொலி - TVNMK 1264

4. ராசிபுரம் பழைய பேருந்து நிலைய சங்கொலி - TVNMK 1264

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்: மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த சங்கொலியை மீண்டும் செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மனு விவரம்
ராசிபுரம் பழைய பேருந்து நிலைய சங்கொலி

Publish on: 19-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக இராசிபுரம் நகராட்சி ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on: 26-02-2010

இராசிபுரம் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த சங்கொலி மீண்டும் செயல்படுத்த நகா்மன்ற தலைவரின் உரிய அனுமதி பெற்று தினமும் சங்கொலி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவிக்கப்படுகிறது

5. இராசிபுரம் to சேலம் செல்வதற்கு இராசிபுரத்தில் அரசு பஸ்கள் ஒரு வழியிலும் தனியார் பஸ்கள் ஒரு வழியிலும் செல்கின்றது.

5. இராசிபுரம் to சேலம் செல்வதற்கு இராசிபுரத்தில் அரசு பஸ்கள் ஒரு வழியிலும் தனியார் பஸ்கள் ஒரு வழியிலும் செல்கின்றது.
- TVNMK 1269

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
இராசிபுரம் to சேலம் செல்வதற்கு இராசிபுரத்தில் அரசு பஸ்கள் ஒரு வழியிலும் தனியார் பஸ்கள் ஒரு வழியிலும் செல்கின்றது.அதனால், இராசிபுரம் to சேலம் செல்லும் பயணிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர், அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலர்கள் என பலரும் அவதிப்படுகின்றனர். எனவே,மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


மனு விவரம்

Publish on: 19-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக இராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளருக்கு நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.
Publish on: 08-03-2010

இப்புகார் மனுவில் தெரிவிக்கப்பட்ட பொருள் தொடர்பாக இராசிபுரம் முதல் சேலம் செல்லும் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இவ்வலுவலக களப்பணியாளர்களால் நாள்தோறும் ஆய்வு செய்யப்பட்டு அனுமதிக்கு புறம்பாக இயக்கப்படும் பேருந்துகளின்மீது தணிக்கை அறிக்கை வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தற்போது மேற்கண்ட வழித்தடத்தில் அனைத்து பேருந்துகளும் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும், தொடர்ந்து பேருந்துகளின் இயக்கம் குறித்து களப்பணியாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது என்பைதையும் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

6. இராசிபுரம் to சேலம் செல்வதற்கு இராசிபுரத்தில் அரசு பஸ்களில் கட்டணம் - TVNMK 1274

6. இராசிபுரம் to சேலம் செல்வதற்கு இராசிபுரத்தில் அரசு பஸ்களில் கட்டணம் - TVNMK 1274

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
இராசிபுரம் to சேலம் செல்வதற்கு இராசிபுரத்தில் அரசு பஸ்களில் கட்டணம் ரூ 8.50 தனியார் பஸ்கள் கட்டணம் ரூ 10.00.அதனால், இராசிபுரம் to சேலம் செல்லும் பயணிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர், அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலர்கள் என பலரும் அவதிப்படுகின்றனர். எனவே,மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மனு விவரம்
இராசிபுரம் to சேலம் செல்வதற்கு இராசிபுரத்தில் அரசு பஸ்களில் கட்டணம்

Publish on: 19-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on
: 22-03-2010

புகார் மனுவில் தெரிவிக்கப்பட்ட பொருள் தொடர்பாக இராசிபுரம் முதல் சேலம் செல்லும் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளில் வெவ்வேறு கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படவேண்டுமென சேலம மற்றும் நாமக்கல் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இவ்வலுவலக களப்பணியாளர்களால் நாள்தோறும் ஆய்வு செய்யப்பட்டு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை வழங்கி மேல்நடவடிக்கை தொடரப்பட்டு வருகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

7. நாமக்கல் பேருந்து நிலையத்தில் நிழற்கூடங்களில் உடைந்த சிமெண்ட் அட்டைகளை மாற்ற வேண்டி - TVNMK 1763

7. நாமக்கல் பேருந்து நிலையத்தில் நிழற்கூடங்களில் உடைந்த சிமெண்ட் அட்டைகளை மாற்ற வேண்டி - TVNMK 1763

நாமக்கல் நாமக்கல் பேருந்து நிலையத்தில் நிழற்கூடங்களில் உடைந்த சிமெண்ட் அட்டைகள் உள்ளன. அவை காற்று மழை காரணமாக மக்கள் மீது விழும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ளன அவற்றை மாற்றி புதிய சிணெட் அட்டை அல்லது கான்கிரீட் மேல்தளம் அமைக்கலாம். மேலும் மோகனூர் சாலையில் அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளி எதிரில் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் அருகில் சினிமா போஸ்ட்டர்களை ஒட்டுவதை தடுக்க வேண்டும் அப்பகுதியிலுள்ள நடை பாதைக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

மனு விவரம்
நாமக்கல் பேருந்து நிலையத்தில் நிழற்கூடங்களில் உடைந்த சிமெண்ட் அட்டைகளை மாற்ற வேண்டி

Publish on: 01-03-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் நகராட்சி ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on: 01-03-2010

நாமக்கல் நகராட்சி பேருந்து நிலையத்தில் பயணிகள் இருக்கை மற்றும் நிழற்கூடங்களில் உடைந்து சிமெண்ட் அட்டைகளை மாற்ற ரூ.1,30,000/க்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு மன்ற ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேற்படி பணிகளை மேற்கொள்ள 18.3.2010 அன்று ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டவுடன் பணிகள் விரைந்து மடீக்கப்ப்டும் என்பதையும், மோகனுர்ர் சாலை அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி எதிரில் உள்ள சினிமா போஸ்டர்கள் அகற்றப்பட்டு வருகிறது. மீளவும் அதே இடத்தில் போஸ்டர்கள் ஒட்டாதவாறு தியேட்டர் உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது எனவும், அப்பகுதியில் உள்ள நடைபாதைக் கடைகள் அவ்வப்போது அகற்றப்பட்டு வருவதோடு மீண்டும் கடைகள் வைக்காதவாறு கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

8. நியாயவிலை கடைகளில் அரசு வழங்காத பொருள்கள் கட்டாயமாக விற்பது குறித்து, - TVNMK 1758

8. நியாயவிலை கடைகளில் அரசு வழங்காத பொருள்கள் கட்டாயமாக விற்பது குறித்து, - TVNMK 1758
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .

மாவட்டம் அய்யா நியாயவிலை கடைகளில் அரசு வழங்காத பொருள்கள் சோப்பு, டீ தூள் போன்றவை கட்டாயமாக விற்பனை செய்கின்றனர், இது சாதாரண மக்களை பாதிப்பதாக உள்ளது, நடவடிக்கை எடுக்கப்படுமா?

மனு விவரம்
நியாயவிலை கடைகளில் அரசு வழங்காத பொருள்கள் கட்டாயமாக விற்பது குறித்து,

Publish on: 01-03-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் மாவட்ட வழங்கல் அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட வழங்கல் அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on
: 12-03-2010

அரசு வழங்காத பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்குக் கட்டாயப்படுத்தி விற்கக்கூடாது என விற்பனையாணளர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

9. பள்ளி, கல்லூரி வாகனத்தில் கட்டாயம் உத்தரவுகள் அமல்படுத்த - TVNMK 1753

9. பள்ளி, கல்லூரி வாகனத்தில் கட்டாயம் உத்தரவுகள் அமல்படுத்த - TVNMK 1753

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
நாமக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ளன. அதன் பஸ், வேன்களில் மாணவ, மாணவியரை ஏற்றிச்செல்லும் போது டிரைவர்கள் 65 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், முறையான லைசென்ஸ் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். விபத்துக்களை தவிர்க்க ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு உதவியாளர் கட்டாயம் அமர்த்த வேண்டும். வாகன மாடல்கள் 10 ஆண்டுகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி வாகனங்களில் கட்டாயம் வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்திருக்க வேண்டும் போன்ற உத்தரவுகள் அமல்படுத்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


மனு விவரம்
பள்ளி, கல்லூரி வாகனத்தில் கட்டாயம் உத்தரவுகள் அமல்படுத்த

Publish on: 01-03-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கும், திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

: Publish on 08-03-2010

புகார் மனுவில் தெரிவிக்கப்பட்ட பொருள் தொடர்பாக இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் உச்சநீதிமன்ற உத்தரவினை பின்பற்றுமாறு தக்க அறிவுரைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஆணையர், சென்னை -5 அவர்களின் உத்தரவின்படி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் இவ்வலுவலக களப்பணியாளர்களால் நாளது தேதி வரை 1854 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக 333 தணிக்கை அறிக்கைகள் வழங்கி மேல் நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றது என்பதையும் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

10. ராசிபுரத்தில் இருந்து சேலம் செல்லும் பஸ்கள் கூடுதலாக கட்டணம் - TVNMK 1748

10. ராசிபுரத்தில் இருந்து சேலம் செல்லும் பஸ்கள் கூடுதலாக கட்டணம் - TVNMK 1748

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
ராசிபுரம்- சேலம் சாலையில் ஆஞ்சநேயர் கோவில் முன்பும், எஸ்.ஆர்.வி., பெண்கள் பள்ளி அருகிலும் நெடுஞ்சாலை துறை மூலம் பாலம் வேலை நடந்து வருகிறது. அதனால், ராசிபுரத்தில் இருந்து சேலம் செல்லும் பஸ்கள் ஆண்டகலூர்கேட் வழியாக செல்லும் நிலை உள்ளது. அதை காரணம் காட்டி ராசிபுரத்திலிருந்து சேலத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 8.50 ரூபாயைக் காட்டிலும் 1.50 கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. டீஸல் செலவைக் காரணம் காட்டி 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுபற்றி சம்மந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Read Full Post »மனு விவரம்
ராசிபுரத்தில் இருந்து சேலம் செல்லும் பஸ்கள் கூடுதலாக கட்டணம்

Publish on: 01-03-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மேலாளர் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம் சேலம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலாளரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on: 12-03-2010


Publish on: 19-03-2010

இராசிபுரம் - சேலம் சாலையில் பாலம் வேலை நடைபெற்றதால் பேருந்துகள் ஆண்டகளுர் கேட் வழியாக சென்றன. கூடுதல் கி.மீ இயக்கப்பட்டதால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்சமயம் பாலம் வேலை முடிந்து பழைய வழித்தடத்திலேயே செல்வதால் முன்பு வசூலித்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

11. திருச்செங்கோடு ஆனங்கூர் சாலையில் உள்ள தெப்பக்குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்த - TVNMK 1621

11. திருச்செங்கோடு ஆனங்கூர் சாலையில் உள்ள தெப்பக்குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்த - TVNMK 1621

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் . திருச்செங்கோடு ஆனங்கூர் சாலையில் உள்ள தெப்பக்குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மனு விவரம்
திருச்செங்கோடு ஆனங்கூர் சாலையில் உள்ள தெப்பக்குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்த

Publish on: 01-03-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக திருச்செங்கோடு நகராட்சி ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on: 05-03-2010

அய்யா, திருச்செங்கோடு ஆனங்கூர்சாலையில் உள்ள தெப்பக்குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்த கோரியதில் தற்போது நீர் அதிகம் உள்ளதால் வரும் மே மாத காலத்தில் குளத்தின் நீர் மட்டம் குறைய வாப்புள்ளதால் அப்பொழுது தூர்வார நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. நகராட்சி ஆணையாளர், திருச்செங்கோடு நகராட்சி.

12. குழந்தைகளின் நலன் கருதி சத்துணவுக்கூடம் - TVNMK 1631

12. குழந்தைகளின் நலன் கருதி சத்துணவுக்கூடம் - TVNMK 1631

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் . திருச்செங்கோட்டில் உள்ள நகராட்சி 25வது வார்டு பகுதியில் சத்துணவுக்கூடம் இல்லை. அங்கன்வாடி குழந்தைகள் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. குழந்தைகளின் நலன் கருதி சத்துணவுக்கூடம் அமைத்து தரவேண்டும்


மனு விவரம்
குழந்தைகளின் நலன் கருதி சத்துணவுக்கூடம்

Publish on: 01-03-2010

தங்களின் மனு தக்க நடவடிக்கைக்காக நேர்முக உதவியாளர் (பொது) சத்துணவு திட்ட நியமனம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நோ்முக உதவியாளரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on: 22-03-2010

திருச்செங்கோடு நகரம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலரால் தல தணிக்கை மேற்கொண்டு 24 மற்றும் 25வது வார்டு குழந்தைகள் அனைவரும் மலையடிவாரம் -1 அங்கன்வாடி மையம் மூலமாக பயனடைந்து வருவதாகவும் 25து வார்டுக்கென தனி மையம் துவங்க இயலாது என குறிப்பிட்டுள்ளார். எனவே குழந்தைகள் எவரும் 1கி.மீ தூரம் நடந்து செல்லவில்லை என்பதால் 25வது வார்டுக்கென புதிய மையம் துவங்க இயலாது என்பதை மனுதாரருக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

13. கல்வி கடன் - TVNMK1611

13. கல்வி கடன் - TVNMK1611

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
one R.Vimala 22/75,Thammana Chettiyar street, Komara palayam Namakkal district-638183 studying BE(CSE) in Excel Engineering college by counselling. Since her father is a daily wage employee, he is unable to pay my fees. So she have applied for education loan in bank. But in bank they are not responding properly. So she have given a petition to you in person regarding this (petition no : DP/09/06602) ON 24.08.2009. Still she haven’t received loan from bank. So we request you to take necessary steps to get loan from bank as soon as possible for continuing her higher education.

மனு விவரம்
கல்வி கடன்

Publish on: 01-03-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட கிளை மேலாளர் இந்தியன் வங்கி நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கிளை மேலாளரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on: 23-04-2010

மனுதாரர் அணுகிய வங்கியை பற்றிய விவரங்களை தெரிவிக்காத காரணத்தினால் மனு மீது நடவடிக்கை எடுக்க இயலவில்லை. மனுதாரர் வங்கியை அணுகி மற்ற விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டியது. மேலாளர் முன்னோடி வங்கி நாமக்கல்

14. திருச்செங்கோடு 25வது வார்டு பகுதியில் சத்துணவுக்கூடம் - TVNMK 1616

14. திருச்செங்கோடு 25வது வார்டு பகுதியில் சத்துணவுக்கூடம் - TVNMK 1616

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் . திருச்செங்கோடு 25வது வார்டு பகுதியில் சத்துணவுக்கூடம் இல்லை. அங்கன்வாடி குழந்தைகள் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. குழந்தைகளின் நலன் கருதி சத்துணவுக்கூடம் அமைத்து தர மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


மனு விவரம்
திருச்செங்கோடு 25வது வார்டு பகுதியில் சத்துணவுக்கூடம்

: Publish on 01-03-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நோ்முக உதவியாளர் (பொது) சத்துணவுத் திட்ட அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. நோ்முக உதவியாளரின் அறிக்கை பெற்று பதில் விரைவில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on: 18-03-2010

திருச்செங்கோடு நகரம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலரால் தல தணிக்கை மேற்கொண்டு 24 மற்றும் 25வது வார்டு குழந்தைகள் அனைவரும் மலையடிவாரம் -1 அங்கன்வாடி மையம் மூலமாக பயனடைந்து வருவதாகவும் 25து வார்டுக்கென தனி மையம் துவங்க இயலாது என குறிப்பிட்டுள்ளார். எனவே குழந்தைகள் எவரும் 1கி.மீ தூரம் நடந்து செல்லவில்லை என்பதால் 25வது வார்டுக்கென புதிய மையம் துவங்க இயலாது என்பதை மனுதாரருக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

15. திருச்செங்கோடு - சங்ககிரி அரசு டவுன் பஸ்களில் கூடுதல் கட்டணம் - TVNMK 1606

15. திருச்செங்கோடு - சங்ககிரி அரசு டவுன் பஸ்களில் கூடுதல் கட்டணம் - TVNMK 160 6

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
நாமக்கல் மாவட்டம்
திருச்செங்கோட்டில் இருந்து சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக பஸ்கள் இயக்கப்படுகின்றன. சேலம் மாவட்டத்துக்கு உட்பட்ட சங்ககிரி, இடைப்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்டிலிருந்து நேரடியாக டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருச்செங்கோடு- சங்ககிரிக்கு அரசு டவுன் பஸ்களில் 4 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சங்ககிரி சாலையில் பாலம் வேலை நடக்கிறது. அதன்காரணமாக அவ்வழியாக செல்லும் பஸ்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. மாற்றுப்பாதையில் பஸ்கள் செல்வதை காரணம்காட்டி திருச்செங்கோடு - சங்ககிரி செல்லும் அனைத்து அரசு டவுன் பஸ் ளிலும் 50 பைசா முதல் ஒரு ரூபாய் வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திருச்செங்கோடு - சங்ககிரி அரசு டவுன் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


மனு விவரம்
திருச்செங்கோடு - சங்ககிரி அரசு டவுன் பஸ்களில் கூடுதல் கட்டணம்

Publish on: 01-03-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மேலாளர் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம் சேலம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலாளரின் அறிக்கை பெற்று பதில் வி்ரைவில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on: 19-03-2010

சங்ககிரியிலிருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் திருச்செங்கோடு பிரிவிலிருந்து சங்ககிரி ஆர்.எஸ்.பள்ளிகூடம் வரை உள்ள சிறு பாலங்கள் திரும்ப கட்டும் பணி 25.01.2010 முதல் நடைபெற்று வருகிறது. இதனால் பேருந்துகள் நாகிசெட்டிப்பட்டி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் பொருட்டு சுமார் 2.8 கி.மீ கூடுதலாகிறது. எனவே திருச்செங்கோடு-சங்ககிரி நகரப்பேருந்துகளுக்கு ரூ.4.00 பயணக்கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.தற்சமயம் ரூ.4.50 பயணக்கட்டமாக தூரத்திற்கேற்ப வசூலிக்கப்பட்டு வருகிறது சிறு பாலங்கள் கட்டுமான பணி நி்றைவு பெற்றவுடன் பழைய வழித்தடத்தில் பேருந்தினை இயக்கப்படும்பொழுது பழைய பயணக்கட்டணம் வசூல் செய்யப்படும்.

16. சேந்தமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வேளாண்மைக்கடன் - TVNMK 1601

16. சேந்தமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வேளாண்மைக்கடன் - TVNMK 1601

அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் . நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வேளாண்மைக்கடன் கோரும் விவசாயிகளுக்கு முறையாக கடன் வழங்கப்படுவதில்லை. தட்டுப்பாட்டின்றி விவசாயக் கடன் வழங்குவதாக அரசு அறிவித்தாலும் வங்கி அலுவலர்கள் அதனை முறையாக பின்பற்றுவதில்லை. பல்வேறு காரணங்களை கூறி வேளாண் கடன் வழங்க மறுப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.கூட்டுறவு வங்கியில் வேளாண்மைக்கடன் கோரும் விவசாயிகளுக்கு முறையாக கடன் வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!


மனு விவரம்
சேந்தமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வேளாண்மைக்கடன்

Publish on: 01-03-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் கூட்டுறவு இணைப்பதிவாளர், கூட்டுறவுத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இணைப்பதிவாளரின் அறிக்கை பெற்று பதில் விரைவில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 04-03-2010

Members who are approaching sendamangalam PACS for crop loans are sanctioned the loan without any reluctance if they submit relevant documents to the society. If att all thereis any specific complaint that will be dealt with appropriately

17. நான்கு ஆண்டுகளாக கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் நிலுவையில் உள்ள பலமனுக்கள் - TVNMK1492

17. நான்கு ஆண்டுகளாக கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் நிலுவையில் உள்ள பலமனுக்கள் - TVNMK1492

அனுப்புநர்
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் . நான்கு ஆண்டுகளாக கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய உதவித் தொகையின்றி கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் நிலுவையில் உள்ள பலமனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து உடனடியாக உதவித் தொகை வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மனு விவரம்
நான்கு ஆண்டுகளாக கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் நிலுவையில் உள்ள பலமனுக்கள்

Publish on: 25-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயலர், தொழிலாளர் நல வாரியம் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on: 22-03-2010

2006 முதல் 2010 நாளதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்களுக்கு உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் மற்றும் குறைபாடான தகுதியற்ற விண்ணப்பங்களை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பதையும் மேலும் மகப்பேறு மற்றும் இயற்கை மரண உதவித்தொகை கோரும் விண்ணப்பங்களில் சில பிற துறைகளில் இதே போன்ற நிதியுதவி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணைக்குப்பின் அனுமதிக்கப்படும் என பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

18.. பெற்றோரை இழந்த பொறியியல் கல்லூரி மாணவர் ... கனரா வங்கி கல்வி கடன்...தவனையை வழங்க மறுப்பதால் - TVNMK 1497

18.. பெற்றோரை இழந்த பொறியியல் கல்லூரி மாணவர் ... கனரா வங்கி கல்வி கடன்...தவனையை வழங்க மறுப்பதால் - TVNMK 1497

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் . சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த பெற்றோரை இழந்த கோவை VLB ஜானகியம்மாள் பொறியியல் கல்லூரியில் BE Mech III year பயிலும் மாணவர் லெனின் த/பெ கண்ணன் (TSTC CONDUCTOR )என்பவருக்கு சேலம் கோட்டை கிளை கனரா வங்கி கல்வி கடன் (கல்வி கடன்கணக்கு எண் GA 07 EL 00072) தவனையை வழங்க மறுப்பதால்மனு விவரம்
பெற்றோரை இழந்த பொறியியல் கல்லூரி மாணவர் ... கனரா வங்கி கல்வி கடன்...தவனையை வழங்க மறுப்பதால்

Publish on: 25-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் இந்தியன் வங்கி கிளை மேலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. கிளை மேலாளரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்

Publish on: 16-04-2010

மனுதாரர் கல்விக்கடன் விடுவிக்க கோரும் மனு சேலம் மாவட்டம் சம்பந்தப்பட்டதால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சேலம் கோட்ட அலுவலகங்களில் மனு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது

Publish on: 16-04-2010

மனுதாரர் கல்விக்கடன் விடுவிக்க கோரும் மனு சேலம் மாவட்டம் சம்பந்தப்பட்டதால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சேலம் கோட்ட அலுவலகங்களில் மனு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.

Publish on: 24-04-2010

மனுதாரர் சேலம் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை அணுக வேண்டியது. முன்னோடி வங்கி மேலாளர் நாமக்கல்

19. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் சிறப்பு பயிற்சிகள் அரசு பணம் வீணாகும் அவலம் - TVNMK 1526

19. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் சிறப்பு பயிற்சிகள் அரசு பணம் வீணாகும் அவலம் - TVNMK 1526

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் . பார்வை:தினமலர் 25.02.2010
அய்யா,
நாமக்கல் மாவட்டத்தில் 15 யூனியன் உள்ளன.ஒவ்வொரு யூனியனிலும் தலா ஒரு வட்டார வளமையம் செயல்பட்டு வருகிறது. இம்மையம் மூலம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தும் முறை குறித்து பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஆண்டுக்கு 20 நாள் வீதம் இப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, ஒவ்வொரு வட்டார வளமையத்தின் கட்டுப்பாட்டில் குறைந்தபட்சம் ஐந்து முதல் ஆறு குறுவள மையம் எனும் பள்ளித்தொகுப்பு கருத்தாய்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் முதல், இரண்டாவது சனிக்கிழமையில் சம்மந்தப்பட்ட குறுவள மையத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய கல்விமுறை சம்மந்தமான பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அப்பயிற்சியை வட்டார வளமையத்தில் உள்ள ஆசிரியப் பயிற்றுனர்கள் அளிக்கின்றனர். பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு நாளொன்றுக்கு 50 ரூபாய் வீதம் பயணப்படி வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு எளிதான முறையில் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என்பதே இப்பயிற்சியின் முழு நோக்கம். இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட குறுவள மையங்களில் பயிற்சி சரிவர நடப்பதில்லை. பயிற்சியின் நோக்கம் முழுமையாக நிறைவேறாததுடன், அளிக்கப்படும் உதவித்தொகை மூலம் திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதியும் வீணடிக்கப்பட்டு வருகிறது மாணவர்களின் கல்வித்தரம் மேம்பட அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சி அளிக்கிறது. குறுவள மையங்களிலும் ஒவ்வொரு மாதம் முதல், இரண்டாவது சனிக்கிழமையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி சரிவர நடப்பதில்லை. காலை 9.30 மணிக்கு பயிற்சி ஆரம்பிக்க வேண்டும். பின், காலை 11.15க்கு சிறிய இடைவெளி. தொடர்ந்து மதியம் 1-2 மணி வரை உணவு இடைவேளை. மாலை 4.30 வரை இப்பயிற்சி நடக்க வேண்டும். ஆனால், மேற்குறிப்பிட்ட நேரப்படி பெரும்பாலான குறுவள மையத்தில் பயிற்சி நடப்பதில்லை. கடனுக்காக பயிற்சி அளிக்கப்படுகிறது. அப்பயிற்சி நடக்கும் நாட்களில் அதில் பங்கேற்கும் ஆசிரியர்கள் யாரேனும் ஒருவர் தனது திருமண நாள், பிறந்த நாள், பதவி உயர்வு போன்ற பெயரில் விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். அந்த விருந்துக்காக ஆசிரியர்கள் குறு வளமைய பயிற்சிக்கு வருகின்றனர். மேற்குறிப்பிட்டபடி பயிற்சி நேரமும் சரிவர கடைபிடிப்பதில்லை. அதை குறுவளமைய ஒருங்கிணைப்பாளர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆகியோர் கண்காணிக்க வேண்டும். அவர்களும் ஆசிரியர்கள் அளிக்கும் விருந்தில் பங்கேற்று அன்றைய சாப்பாட்டு செலவு மிச்சம் என்ற வகையில் கண்டும் காணாததுபோல் சென்று விடுகின்றனர். அதுபோல் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி இயக்குனரும் பயிற்சி சரிவர நடக்கிறதா என்பது பற்றி கண்டு கொள்வதில்லை.

Read Full Post மனு விவரம்
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் சிறப்பு பயிற்சிகள் அரசு பணம் வீணாகும் அவலம்

: Publish on 25-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதன்மைக் கல்வி அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

: Publish on 02-03-2010

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் குறுவள மையத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய கல்வி முறை சம்மந்தமாக வழங்கப்படும் பயிற்சி அந்தந்த வட்டார வளமைய மேற்பாவையாளர் மூலம் முறையாக அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் மேற்பார்வையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்பதை மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.

20. ஆக்கிரமிப்பு-- தவறுக்கு காரணமாக இருந்த வருவாய்த் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை - TVNMK 1531

20. ஆக்கிரமிப்பு-- தவறுக்கு காரணமாக இருந்த வருவாய்த் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை - TVNMK 1531

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் நாமக்கல் புறநகர்த் திட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பொதுமக்களுக்கு கட்டித் தரப்பட்டுள்ளது. குடியிருப்பு கட்டுவதற்கான திட்டப் பகுதியில் ஓடை புறம்போக்கு, வண்டிப்பாதை புறம்போக்கு நிலம் 7.25 ஏக்கர் அளவுக்கு ஆக்கிரமிப்பு செய்து வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் வீடுகள் கட்டி விற்பனை செய்யப்பட்டுள்ளது. வருவாய்த் துறையிடம் எந்தவித முன் அனுமதியும் பெறாது ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டிய பிறகு 20 ஆண்டுகள் கழித்து நில மதிப்பை நிர்ணயம் செய்து தரும்படி வீட்டு வசதி வாரியம் கோருவதாக வருவாய்த் துறை கூறுகிறது. வீட்டு வசதி வாரியம் அனுமதி பெறாமல் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபடும்போதே வருவாய்த் துறை நடவடிக்கை எடுக்காமல் இருந்தது கடமை தவறிய செயலாகும். இதன் காரணமாக புறம்போக்கு நிலத்துக்கு தற்போதைய விலை மதிப்பை செலுத்த வேண்டிய நிலை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஏற்பட்டுள்ளது. வருவாய்த் துறையும் புறம்போக்கு நிலத்துக்கு விலை நிர்ணயம் செய்வதில் காலதாமதம் செய்வதால் வீடு ஒதுக்கீடு பெற்ற நபர்கள் விற்பனை ஆவணம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். தவறுக்கு காரணமாக இருந்த வருவாய்த் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read Full Post »
மனு விவரம்
ஆக்கிரமிப்பு தவறுக்கு காரணமாக இருந்த வருவாய்த் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை

Publish on : 25-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on: 05-03-2 010

வண்டிப்பாதை மற்றும் ஓடை என வகைபாடு செய்யப்பட்டுள்ள நிலங்களில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேற்படி நிலங்களில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு முன்நுழைவு செய்துக்கொள்ள வருவாய்த் துறையால் முன்நுழைவு அனுமதி வழங்கப்படவில்லை. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வீடுகள் கட்டும்பொழுதே வருவாய் துறையிடம் முறையாக முன்நுழைவு அனுமதி பெற்றிருக்க வேண்டும். அதைவிடுத்து வருவாய்த்துறை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தை வீடு கட்டாமல் தடுத்திருக்க வேண்டும் என கோருவது ஏற்க இயலாது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் 1989, 1991 -ம் ஆண்டுகளில் மேற்படி இனங்களில் முன்நுழைவு அனுமதி பெற்றுக் கொண்டதற்கான ஆதாரங்கள் ஏதும் சமர்ப்பிக்கவில்லை. அதனால் மேற்படி ஆண்டுகளில் விலைமதிப்பை நிர்ணயம் செய்ய இயலாது. மேலும் மேற்படி ஆவணங்கள் ஏதும் இல்லாத சூழலில் தற்போதைய சந்தை மதிப்பை செலுத்தக் கோரியதில் தற்பொழுது அந்த மதிப்பை செலுத்த இயலாது என வீட்டுவசதி வாரியம் தெரிவித்துள்ளது. எனவே மேற்கண்ட இரண்டு அம்சங்களும் வீட்டுவசதி வாரியம் ஒத்துவராத நிலையில் வருவாய் துறையால் எவ்வித முடிவுக்கும் வர இயலாது என தெரிவித்துக் கொள்கிறேன். எனினும் வீட்டுவசதி வாரியம் 1989, 1991 ஆண்டுகளில் விலைமதிப்பை நிர்ணயம் செய்யக் கோருவதை ஏற்றுக் கொள்ளலாமா? என்பது குறித்து சென்னை முதன்மை செயலர் மற்றும் நில நிர்வாக ஆணையர் அவர்களிடம் தெளிவுரை கேட்கப்பட்டுள்ளது. எனவே சென்னை முதன்மை செயலர் மற்றும் நில நிர்வாக ஆணையரிமிருந்து தெளிவுரை வரப்பெற்ற பின்னரே மேற்படி 7.20 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்வது குறித்து முடிவெடுக்க இயலும்.

21.நீதிமன்ற பணிகளை விரைந்து முடிக்க கோரல் - TVNMK5585

21.. நீதிமன்ற பணிகளை விரைந்து முடிக்க கோரல் - TVNMK5585
நாமக்கல்,திருச்சி சாலையில் மாவட்ட நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றமும், மோக னூர் சாலையில் உரிமையியல் நீதிமன்றமும் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் ஒரே இடத் தில் அமையும் வகையில் ரூ.10 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 12 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு நீதிமன்ற வளாக கட்டுமான பணிகள் கடந்தாண்டு தொடங்கின. இப்பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த நீதிமன்ற கட்டுமான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது, மீதமுள்ள 10 சதவீத பணிகள் விரைவில் முடிக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Read Full Post »

மனு விவரம்

Publish on : 07-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 18-05-2010

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதி அரசர்களின் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டு, பூச்சுவேலை முடிவடைந்துள்ளது. மேலும் தண்ணீர் விநியோக அமைப்பு மற்றும் சுகாதார அமைப்பு அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. மேலும் மேற்படி பணி முடிக்க ஒப்பந்த காலம் அக்டோபர் 2010 முடிய உள்ளதால், ஒப்பந்த கால கெடுவுக்குள் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் குடியிருப்புகள் கட்டும் பணி முழுமையாக முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இப்பணிக்கு திருத்திய நிர்வாக ஒப்புதல் அரசிடமிருந்து பெறப்படவேண்டும் என்பதையும், இதற்கு கருத்துருக்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

22.நாமக்கல் மாவட்டம் முழுவதும் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதிலும், அகற்றுவதிலும் மாவட்ட நிர்வாகம் பாரபட்சமாக செயல்படுகிறது - TVNMK5566

22.. நாமக்கல் மாவட்டம் முழுவதும் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதிலும், அகற்றுவதிலும் மாவட்ட நிர்வாகம் பாரபட்சமாக செயல்படுகிறது - TVNMK5566
நாமக்கல் மாவட்டம் முழுவதும் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதிலும், அகற்றுவதிலும் மாவட்ட நிர்வாகம் பாரபட்சமாக செயல்படுகிறது. ஆளுங்கட்சியினர் மற்றும் அவர்களது கூட்டணி கட்சியினரது டிஜிட்டல் பேனர்களாக இருந்தால் பல நாட்கள் அப்படியே அனுமதிப்பதும், எதிர்க்கட்சிகள் என்றால் உடனடியாக அகற்றுவதும் வாடிக்கையாக உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் அனைத்து கட்சிகளுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகளை பின்பற்ற மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

மனு விவரம்

பாட்டாளி மக்கள் கட்சி நாமக்​கல் மாவட்டம் முழுவதும் டிஜிட்​டல் பேனர்​கள் வைப்​ப​தி​லும்,​​ அகற்​று​வ​தி​லும் மாவட்ட நிர்​வா​கம் பார​பட்​ச​மாக செயல்​ப​டு​கி​றது

Publish on : 05-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக காவல் கண்காணிப்பாளர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

23.கூனவேலம்பட்டிபுதூர் சுகாதார வளாகத்தில் நீர் தட்டுப்பாடு TVNMK5745

Posted on : 08-06-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/

பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்

புகார் விவரம் : கூனவேலம்பட்டிபுதூர் மகளிர் சுகாதார வளாகத்தில் ஆழ்துளை கிணற்றின் மின்மோட்டார் பல மாதங்களாக பழுதடைந்துள்ள நிலையில், ஊராட்சி சார்பில் சீர்செய்யப்படவில்லை.இதனால் பெண்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 09-06-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் இராசிபுரம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 10-06-2010

கூனவேலம்பட்டிபுதூர் மகளிர் சுகாதார வளாகத்தில் ஆழ்துளை கிணற்றின் மின்மோட்டார் ஊராட்சி பொதுநிதியில் பழுது சரிசெய்யப்பட்டு சுகாதார வளாகத்திற்கு தேவையான தண்ணீர் வழங்கப்பட்டுவருகிறது

24.இராசிபுரம் வட்டம் தட்டான்குட்டை ஏரியில் இருந்து அணைப்பாளையம் ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாருதல் - TVNMK5575

24.இராசிபுரம் வட்டம் தட்டான்குட்டை ஏரியில் இருந்து அணைப்பாளையம் ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாருதல் - TVNMK5575
இராசிபுரம் வட்டம் தட்டான்குட்டை ஏரியில் இருந்து அணைப்பாளையம் ஏரி வரை செல்லும் ஓடையின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கைஎடுக்குமாறு அன்புடன்கேட்டுக்கொள்கிறோம்
Read Full Post »


இராசிபுரம் வட்டம் தட்டான்குட்டை ஏரியில் இருந்து அணைப்பாளையம் ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாருதல்

Publish on : 06-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை சரபங்கா வடிநிலக்கோட்டம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 14-05-2010

இராசிபுரம் வட்டம் இராசிபுரம் ஊராட்சி ஓன்றியம் போத‌மலையில் இருந்து பூசாரிபளையம் ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வாரும் பணி வரும் நிதியாண்டில் முன்னுரிமை அடிபடையில் பணி மேற்கொள்ளப்படும்

Publish on : 14-05-2010

இராசிபுரம் வட்டம் தட்டான்குட்டை ஏரியில் இருந்து அனைபாளையம் ஏரி வரை செல்லும் ஓடையின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும்பணி வரும் நிதியாண்டில் முன்னுரிமை அடிபடையில் பணி மேற்கொள்ளப்படும்

25 பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவ, மாணவியருக்கு சமச்சீர் பாடப்புத்தகங்கள் புத்தகங்கள் விநியோகம் செய்ய

Posted on : 31-05-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/

பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்

புகார் விவரம் : நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் முதல் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான சமச்சீர் பாடப்புத்தகங்கள் வந்துள்ளன. ஒரு மாதத்துக்கு முன், 2ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலும், 7ம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான பாடப் புத்தகங்கள் , தபால்துறை மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு முதல் 1ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளில் சமச்சீர் கல்வித்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. அதற்கான பாடபுத்தகங்கள் சென்னை அரசு பாடநூல் நிறுவனத்தில் இருந்து லாரி மூலம் நாமக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பாடப்புத்தகங்கள் அனைத்தும் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரஙகில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 1ம் வகுப்புக்கு 21 ஆயிரம் புத்தகமும், 6ம் வகுப்புக்கு 66 ஆயிரம் புத்தகங்களும் வந்துள்ளன. பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவ, மாணவியருக்கு இந்த புத்தகங்கள் விநியோகம் செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

தொடர்புடைய துறை : பொதுவானவை


Publish on : 31-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்


Publish on : 03-06-2010

அனைத்து பள்ளிகளுக்கும் 01.06.2010 அன்று சமச்சீர் பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது.


Publish on : 03-06-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

26. உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தாமதிப்பதால், நாமக்கல் மாவட்ட வருவாய்துறையில் பதவி உயர்வுக - TVNMK 5481

26. உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தாமதிப்பதால், நாமக்கல் மாவட்ட வருவாய்துறையில் பதவி உயர்வுக - TVNMK 5481
Read Full Post »
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .

மனு விவரம்
உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தாமதிப்பதால், நாமக்கல் மாவட்ட வருவாய்துறையில் பதவி உயர்வுக

Publish on : 20-04-2010


Read Full Post »: 20-04-2010

2008 ம் ஆண்டுக்கான துணை வட்டாட்சியர் பட்டியல் வெளியிடப்பட்ட கோப்பு முதன்மை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர், சேப்பாக்கம் சென்னை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோப்பு வரப்பெற்றவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

27. திரையரங்குகளிலும், வணிக வளாகங்களிலும் தீ தடுப்பு விதிகள் பின்பற்றப்பட TVNMK 5490

27. திரையரங்குகளிலும், வணிக வளாகங்களிலும் தீ தடுப்பு விதிகள் பின்பற்றப்பட TVNMK 5490
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .

நாமக்கல் மாவட்டத்தில் திரையரங்குகளிலும், வணிக வளாகங்களிலும் தீ தடுப்பு விதிகள் பின்பற்றப்படவில்லை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Read Full Post »

மனு விவரம்
பாட்டாளி மக்கள் கட்சி............ ........ திரையரங்குகளிலும், வணிக வளாகங்களிலும் தீ தடுப்பு வி


தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட வன அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.மாவட்ட வன அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 22-04-2010

நாமக்கல் மாவட்டத்தில் இயங்கிவரும் திரையரங்குகளை வருடந்தோறும் நாமக்கல் கோட்ட அலுவலர் தலைமையில் கூட்டாய்வு செய்யப்பட்டு வருகிறது. சில திரையரங்குகளில் மட்டும் தீயணைப்பு கருவிகள் மறு நிரப்பம் செய்யப்படாமல் உள்ள குறைகளை சுட்டிகாட்டி சம்பந்தப்பட்ட திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஆய்வின்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இயங்கிவரும் வணிக வளாகங்கள் முறையாக ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

28. சின்னமுதலைப்பட்டியில் பஞ்சாயத்தில் குபபைகளை அகற்றக்கோருதல் - TVNMK 5482

28. சின்னமுதலைப்பட்டியில் பஞ்சாயத்தில் குபபைகளை அகற்றக்கோருதல் - TVNMK 5482
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.

பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .

நாமக்கல் யூனியனுக்கு உப்பட்ட சின்னமுதலைப்பட்டி பஞ்சாயத்தில் 5 வார்டுகள் உள்ளன. அதில், 6,000க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இந்த பஞ்சாயத்தில் திடக்கழிவு மேலாண் திட்டத்தின் கீழ், பஞ்சாயத்தில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்தெடுக்க வசதியாக 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 2வது மற்றும் 5வது வார்டு சந்திக்கும் இடத்தில் அறை கட்டப்பட்டது. ஆனால், பஞ்சாயத்தில் சேரும் குப்பைகளை கொண்டு வந்து அறைக்கு வெளியேதான் கொட்டிச்செல்கின்றனர். அதனால், சுற்றித்திரியும் தெருநாய்களின் புகலிடமாக மாறியுள்ளது. மேலும், குப்பைகள் காற்றில் பறந்து அருகில் உள்ள வீடுகளுக்கு செல்கிறது. மாதக்கணக்கில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் ஏற்படும் துர்நாற்றத்தால், வீடுகளில் குடியிருக்க முடியாத நிலை உள்ளது. தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Read Full Post »»மனு விவரம்
சின்னமுதலைப்பட்டியில் பஞ்சாயத்தில் குபபைகளை அகற்றக்கோருதல்

Publish on: 18-04-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on: 23-04-2010

குப்பைகளை அகற்ற சின்னமுதலைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

29. திறந்த வெளி கிணற்றுக்கு சுற்றுச் சுவர் கட்ட கோருதல் TVNMK 5476

29. திறந்த வெளி கிணற்றுக்கு சுற்றுச் சுவர் கட்ட கோருதல் - TVNMK 5476
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.

பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
இராசிபுரம் ‍ஆத்துர் செல்லும் சாலையில் கோனேரிபட்டி ஏரிக்கரையில் சாலையோரம் (வலதுபுறம்) உள்ள நீர் விற்பனை செய்யும் நல்ல தண்ணீர் கிணற்றுக்கு தடுப்புச் சுவர் இல்லாததால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் திறந்த வெளி கிணறினால் விபத்தில் சிக்கினால் உயர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதற்கு தடுப்புச் சுவர் அமைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Read Full Post »
»மனு விவரம்
திறந்த வெளி கிணற்றுக்கு சுற்றுச் சுவர் கட்ட கோருதல் சார்பு

Publish on : 18-04-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக கோட்டப் பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோட்டப்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on: 20-04-2010

பார்வையில் காணும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளவாறு மல்லியக்கரை-ராசிபுரம்-திருச்செங்கோடு-ஈரோடு சாலை கி.மீ 40/2-ல் கோனேரிப்பட்டி ஏரிக்கரை வலதுபுறம் உள்ள நீர் விற்பனை செய்யும் திறந்தவெளி கிணறு சாலையிலிருந்து 15.00 மீட்டர் தூரம் தள்ளி தனியார் பட்டா நிலத்தில் உள்ளது. அதிக தூரம் தள்ளி இருப்பதாலும் அவ்விடத்தில் சாலையின் அகலம் 12.00மீ ஆக உள்ளதாலும் இக்கிணற்றால் போக்குவரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

30. திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சாக்கடை கழிவு சாலையில் வழிந்தோடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் - TVNMK 5320

30. திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சாக்கடை கழிவு சாலையில் வழிந்தோடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் - TVNMK 5320
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.


பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .

திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சாக்கடை கழிவு சாலையில் வழிந்தோடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட கொல்லப்பட்டி வீட்டு வசதி குடியிருப்பு வளாகத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அப்பகுதியில் சாக்கடை கால்வாய் சரிவர சுத்தம் செய்யததால், கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது. அதனால் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. நகராட்சி நிர்வாகத்தினர் கழிவு நீர் கால்வாயை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Read Full Post »»மனு விவரம்
திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சாக்கடை கழிவு சாலையில

Publish on: 13-04-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் திருச்செங்கோடு நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on: 15-04-2010

திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு க.எண். டி227ன் வீட்டிற்கு முன்பு உள்ள கழிவு நீர் செல்லும் சிறு பாலத்தின் அடியில் பிளாஸ்டிக் பொருட்கள் சென்றதால் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தெருவில் வழிந்தோடியது. 09.04.2010ம் தேதி துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு சாக்கடை அடைப்பு சரிசெய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மீண்டும் மேற்படி சாக்கடை அடைப்பு ஏற்பட்டதால் 10.04.2010ம் தேதி கழிவு நீர் அகற்றும் வாகனம் கொண்டு மீண்டும் சாக்கடை சுத்தம் செய்து பணிகள் முடிக்கப்பட்டது. .. நகராட்சி ஆணையர், திருச்செங்கோடு நகராட்சி.

Publish on: 15-04-2010

திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு க.எண். டி227ன் வீட்டிற்கு முன்பு உள்ள கழிவு நீர் செல்லும் சிறு பாலத்தின் அடியில் பிளாஸ்டிக் பொருட்கள் சென்றதால் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தெருவில் வழிந்தோடியது. 09.04.2010ம் தேதி துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு சாக்கடை அடைப்பு சரிசெய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மீண்டும் மேற்படி சாக்கடை அடைப்பு ஏற்பட்டதால் 10.04.2010ம் தேதி கழிவு நீர் அகற்றும் வாகனம் கொண்டு மீண்டும் சாக்கடை சுத்தம் செய்து பணிகள் முடிக்கப்பட்டது. .. நகராட்சி ஆணையர், திருச்செங்கோடு நகராட்சி.

31. சிற்றுந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 2 ஆக இருந்தது. தற்போது, ரூ. 2.50 காசுகளாக உயர்த்தி வசூ - TVNMK 5321

31. சிற்றுந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 2 ஆக இருந்தது. தற்போது, ரூ. 2.50 காசுகளாக உயர்த்தி வசூ - TVNMK 5321
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.


பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
சிற்றுந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 2 ஆக இருந்தது. தற்போது, ரூ. 2.50 காசுகளாக உயர்த்தி வசூலிக்கின்றனர். இதற்கு எந்தவித அரசாணையும் வெளியிடப்படவில்லை சிற்றுந்துகளின் வழக்கமான கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே, பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையை நிறுத்த மாவட்ட நிர்வாகமும்,மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Read Full Post »
»மனு விவரம்
சிற்றுந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 2 ஆக இருந்தது. தற்போது, ரூ. 2.50 காசுகளாக உயர்த்தி வசூ
Publish on: 13-04-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார போக்குவரத்து அலுவலர், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on: 20-04-2010

சிற்றுந்துகளில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படவேண்டும் என சிற்றுந்து உரிமையாளர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அவ்வப்போது களப்பணியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தெரியவந்தால் சிற்றுந்துகளுக்கு தணிக்கை அறிக்கை வழங்கி மேல்நடவடிக்கை தொடரப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

32. நாமக்கல்-திருச்சி பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் - TVNMK 5322

32. நாமக்கல்-திருச்சி பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் - TVNMK 5322
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.


பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
நாமக்கல்-திருச்சி கட்டணம் ரூ. 26 ஆக இருந்தது. நாமக்கல்லில் ரயில்வே மேம்பாலத்துக்கான பணிகள் நடந்ததால் மாற்றுப் பாதையில் பேருந்துகள் சென்றுவந்ததால் கூடுதலாக 2 ரூபாய் சேர்த்து ரூ. 28 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தற்போது, மேம்பால பணிகள் முடிவடைந்து வழக்கம்போலவே பேருந்துகள் சென்று வருகின்றன. இருப்பினும், உயர்த்தப்பட்ட ரூ. 28 கட்டணத் தொகையே வசூலிக்கப்படுகிறது. எனவே, பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையை நிறுத்த மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்துக் கழகமும் உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Read Full Post »
»மனு விவரம்
நாமக்கல்-திருச்சி பயணிகளிடம் கூடுதலாக கட்டணம்

Publish on: 13-04-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார போக்குவரத்து அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on: 20-04-2010

நாமக்கலில் இருந்து திருச்சி செல்லும் அனைத்து பேருந்துகளிலும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படவேண்டும் என்று பேருந்து உரிமையாளர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வலுவலக களப்பணியாளர்களால் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டும் வருகிறது. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை வழங்கி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

33. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி அடிப்படை வசதி கோரி - TVNMK 5323

33. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி அடிப்படை வசதி கோரி - TVNMK 5323

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி அருகே மாணவர் விடுதியும் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி கல்லூரியில் பயின்று வருகின்றனர். விடுதியில் குளிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். மேலும்விடுதியில் கழிப்பறை மற்றும் சாக்கடை ஆகியவற்றில் பராமரிப்பு இல்லாததால் சுகாதாரக்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. போதிய அடிப்படை வசதிகள் இல்லாததை அடிப்படை வசதிகள் செய்துதர மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Read Full Post »

»
மனு விவரம்
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி அடிப்படை வசதி கோரி

Publish on : 13-04-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on: 22-04-2010

அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் போடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் நீர் வற்றிவிட்டதால் தற்போது 06.04.2010 காவிரி நீர் பைப்லைன் கொடுக்கப்பட்டு தற்போது போதிய குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

34. மாருதிநகர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் தொற்றுநோய் அபாயம் - TVNMK 5324

34. மாருதிநகர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் தொற்றுநோய் அபாயம் - TVNMK 5324

நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ளது மாருதிநகர். வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் நிரம்பியுள்ள பகுதி. அரசு ஊழியர்களுக்கான வாடகை குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரானது ஒவ்வொரு பகுதியாக செல்வதற்கு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. பி பிளாக் வீடுகள் உள்ள பின்புறத்தில் செல்லும் கழிவுநீர்குழாயில் அடைப்பு உள்ளதால் கழிவுநீர் செல்வதில் தடை ஏற்பட்டு அங்குள்ள தொட்டியிலிருந்து கழிவுநீர் வெளியேறி ஓடுகிறது. இதன் காரணமாக அப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. சுற்றுப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். கழிவுநீர்வழிந்தோடும் பகுதியிலேயே குடிநீர் குழாயும் உள்ளது. கழிவுநீர் இந்த தண்ணீருடன் கலந்தால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, உள்ளாட்சி நிர்வாகத்தினரும், வீட்டு வசதிவாரியமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

Read Full Post »
»மனு விவரம்
நாமக்கல் மாருதிநகர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் தொற்றுநோய் அபாயம்

Publish on: 13-04-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் நாமக்கல் மற்றும் செயற்பொறியாளர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அலுவலர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on: 23-04-2010

மாருதி நகர் பகுதியில் கழிவு நீர் வெளியேறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க தலைவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

35. இராசிபுரம் நகரம்,புதிய‌பேருந்து நிலையம் அருகில் டாக்டர் சதாசிவம் மருத்துவமனை அருகில் குஞ்சு மாரியம்மன் கோவில் தெருவில் காணாமற்போன நகராட்சி பொது கு TVNMK 5031

35. இராசிபுரம் நகரம்,புதிய‌பேருந்து நிலையம் அருகில் டாக்டர் சதாசிவம் மருத்துவமனை அருகில் குஞ்சு மாரியம்மன் கோவில் தெருவில் காணாமற்போன நகராட்சி பொது குடிநீர் கிணறு(தர்ம கிணறு) கண்டுபிடிக்க‌- TVNMK 5031

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800

பெறுநர்: மாவட்ட ஆட்சியர்,நாமக்கல் .
இராசிபுரம் நகரம்,புதிய‌பேருந்து நிலையம் அருகில் டாக்டர் சதாசிவம் மருத்துவமனை அருகில் குஞ்சு மாரியம்மன் கோவில் தெருவில் காணாமற்போன நகராட்சி பொது குடிநீர் கிணறு(தர்ம கிணறு) கண்டுபிடிக்க‌மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன்rnகேட்டுக்கொள்கிறோம்

Read Full Post »
மனு விவரம்
இராசிபுரம் நகரம்,புதிய‌பேருந்து நிலையம் அருகில் டாக்டர் சதாசிவம் மருத்துவமனை அருகில் இருந்
Publish on
: 13-04-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் இராசிபுரம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 22-04-2010

இராசிபுரம் நகராட்சி ஆவணங்களில் பரிசீலித்த வகையில் நகராட்சிக்கு சொந்தமான பொது கிணறு குஞ்சு மாரியம்மன் கோவில் தெருவில் இல்லை என்பதை தெரிவிக்கப்படுகிறது.

36. இராசிபுரம் நகரம், சாமுன்டி தியேட்டர் பின்புற‌ம் காணாமற்போன நகராட்சி பொது குடிநீர் கிணற்றினை - TVNMK 5026

36. இராசிபுரம் நகரம், சாமுன்டி தியேட்டர் பின்புற‌ம் காணாமற்போன நகராட்சி பொது குடிநீர் கிணற்றினை - TVNMK 5026

அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800

பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்
நாமக்கல் .
இராசிபுரம் நகரம், சாமுன்டி தியேட்டர் பின்புற‌ம் காணாமற்போன நகராட்சி பொது குடிநீர் கிணற்றினை கண்டுபிடிக்க‌\r\nமாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

Read Full Post »
»
மனு விவரம்
இராசிபுரம் நகரம், சாமுன்டி தியேட்டர் பின்புற‌ம் காணாமற்போன நகராட்சி பொது குடிநீர் கிணற்றினை
: 07-04-2010
Publish on
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் இராசிபுரம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on: 23-04-2010

இராசிபுரம் நகராட்சி சாமுண்டி தியேட்டர் பின்புறம் நகராட்சி்க்கு சொந்தமான பொது கிணறு ஏதும் இல்லை என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

37. இராசிபுரம் நகரம்,பழைய பேருந்து நிலையம் அருகில் டாக்டர் அலிம் மருத்துவமனை அருகில் காணாமற்போன � - TVNMK 5021

37. இராசிபுரம் நகரம்,பழைய பேருந்து நிலையம் அருகில் டாக்டர் அலிம் மருத்துவமனை அருகில் காணாமற்போன � - TVNMK 5021

அனுப்புநர்:
.நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800

பெறுநர்: .
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .

இராசிபுரம் நகரம்,பழைய பேருந்து நிலையம் அருகில் டாக்டர் அலிம் மருத்துவமனை அருகில் காணாமற்போன இரன்டு நகராட்சி பொது குடிநீர் கிணறுகளை கண்டுபிடிக்க‌
மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

Read Full Post »
»மனு விவரம்
இராசிபுரம் நகரம்,பழைய பேருந்து நிலையம் அருகில் டாக்டர் அலிம் மருத்துவமனை அருகில் காணாமற்போன

Publish on : 07-04-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் இராசிபுரம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on: 23-04-2010
இராசிபுரம் நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாக்டர் அலீம் மருத்துவமனை அருகில் நகராட்சிக்கு சொந்தமான கிணறுகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

38. பரமத்திவேலூர்& பொத்தனூர் சாலை சாலையை சீரமைக்க கோரி - TVNMK 4657

38. பரமத்திவேலூர்& பொத்தனூர் சாலை சாலையை சீரமைக்க கோரி - TVNMK 4657

அனுப்புநர்: ,
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800

பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
பரமத்திவேலூர்& பொத்தனூர் சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்கு ஆளாகினர். இதையடுத்து அச்சாலையை சீரமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன் சாலையை சீரமைக்கும் பணி துவங்கியது. திடீரென பணி நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் அப்பணியை முடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Read Full Post »
»மனு விவரம்
சாலையை சீரமைக்க கோரி

Publish on: 07-04-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோட்டப்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on: 12-04-2010

மனுதாரர் குறிப்பிட்டுள்ள சாலை பாண்டமங்கலம் வேலூர் சாலை கி.மீ.15/0‍‍‍‍முதல் 19/8 வரை ஆகும். இச்சாலையில் கி.மீ.15/0‍‍‍‍முதல் 16/6 வரையிலான பகுதியை 2009 2010 ம் ஆண்டில் சிறப்புப் பழுதுபார்த்தல் திட்டத்தின்கீழ் சீரமைக்கப்பட்டது. மீதமுள்ள கி.மீ.16/6 முதல் 19/8 வரையிலான பகுதியில் தார் நொடிகள் சரி செய்து சாலை தற்போது சீரான வாகனப் போக்குவரத்திற்கு ஏற்றதாக செய்யப்பட்டுள்ளது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

39. தண்ணீரை விற்கும் டேங்க் ஆப்ரேட்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - TVNMK 4522

39. தண்ணீரை விற்கும் டேங்க் ஆப்ரேட்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - TVNMK 4522

அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்
நாமக்கல் .
பார்வை:தினமலர் 31.03.2010
நாமக்கல் அடுத்த எலச்சிபாளையம் யூனியன் அகரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேலங்காடு பகுதியில் 120க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். வேலங்காட்டில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இரவு நேரத்தில் தண்ணீர் ஏற்றுவதும், காலையில் மக்களின் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நேரத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதும் வழக்கம். ஒரு மாதமாக தண்ணீர் இரவில் ஏற்றுவதுடன் சரி. மறுநாள் பார்க்கும் போது தொட்டியில் தண்ணீர் இருப்பதில்லை. அதனால், பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகிறோம். இரவில் ஏற்றும் தண்ணீரை டேங்க் ஆப்ரேட்டர் 1,000 ரூபாய், 500 ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு இரவு நேரத்தில் தண்ணீரை விற்றுவிடுகிறார். இது குறித்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகம், பி.டி.ஓ., அலுவலகத்தில் புகார் செய்தும், புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமலும், தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணாமலும் மெத்தனமாக இருந்து வருகின்றனர். தண்ணீருக்காக அருகில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து எடுத்துவந்து பயன்படுத்தி வருகிறோம். தினமும் கூலி வேலைக்கு சென்று கிடைக்கும் வருமானம் மூலம் குடும்பத்தை நடத்தி வருகிறோம். எங்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு வேலங்காடு அத்திமரப்பட்டி மக்களுக்கு உள்ள குடிநீர் பிரச்னையை தீர்க்கவும், டேங்க் ஆப்ரேட்டர் மீது கடும் நடவடிக்கையும் எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Read Full Post »
»மனு விவரம்
தண்ணீரை விற்கும் டேங்க் ஆப்ரேட்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Publish on: 16-04-2010

மேற்படி மனு தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) அவர்களால் ஊராட்சி மன்றத்தலைவர் உடன் தல ஆய்வு செய்து மேற்படி மேல்நிலைத் தொட்டிக்கு அருகில் வழங்கப்பட்டுள்ள தனியார் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு செய்யப்பட்டு குடிநீர் தற்போது சீராக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என பொது மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

40. இராசிபுரம் கோயில் அருகில் மதுக்கடை: அப்புறப்படுத்த - TVNMK 4483

40. இராசிபுரம் கோயில் அருகில் மதுக்கடை: அப்புறப்படுத்த - TVNMK 4483

அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
ராசிபுரம் பெரிய அக்ரஹாரம் பகுதியில் பழமைவாய்ந்த பிள்ளையார் கோயில் உள்ளது. இதனை சுற்றி பெண்கள் அதிகம் வந்து செல்லும், ஜவுளி கடைகள், நகைகடை, மருத்துவமனை உள்ளன. இக்கோயிலுக்கு மிக அருகில் அரசு மதுக்கடை உள்ளது. மதுக்கடைகளில் குடித்து விட்டு வந்து சிலர் தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் கோயிலின் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கும், பூஜைகளுக்கும் இடையூறு ஏற்படுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் இக்கோயிலுக்கு வரும் பெண்களின் கூட்டம் மிகவும் குறைந்து விட்டது. தனியாக வருவதற்கு பெண்கள் தயங்குகின்றனர். இந்த மதுக்கடையை உடனடியாக அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Read Full Post »
»மனு விவரம்
இராசிபுரம் கோயில் அருகில் மதுக்கடை: அப்புறப்படுத்த

Publish on: 16-04-2010

டாஸ்மாக் மாவட்ட மேலாளரின் முன்மொழிவுகளை பெற்று கடை மாற்றம் செய்யப்படும் என மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.

41. மோகனூரில் ஆடி 18 திருவிழா சமயத்தில் வெளியூரில் இருந்து வரும் பெண்கள் காவிரி ஆற்றின் அருகே உடை மாற்ற வசதியாக இருக்க கட்டடம் கட்ட வசதி ஏற்படுத்த -

41. மோகனூரில் ஆடி 18 திருவிழா சமயத்தில் வெளியூரில் இருந்து வரும் பெண்கள் காவிரி ஆற்றின் அருகே உடை மாற்ற வசதியாக இருக்க கட்டடம் கட்ட வசதி ஏற்படுத்த - TVNMK 3207

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
நாமக்கல் மோகனூரில் ஆடி 18 திருவிழா சமயத்தில் வெளியூரில் இருந்து வரும் பெண்கள் காவிரி ஆற்றின் அருகே உடை மாற்ற வசதியாக இருக்க கட்டடம் கட்ட வசதி ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Read Full Post »
»மனு விவரம்
மோகனூரில் ஆடி 18 திருவிழா சமயத்தில் வெளியூரில் இருந்து வரும் பெண்கள் காவிரி ஆற்றின் அருகே உடை

Publish on: 25-03-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மோகனூர் பேரூராட்சி ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on: 26-03-2010

மோகனூர் பேருராட்சியில் சுற்றுலா மேம்பாடு திட்டத்தின் கீழ் காவிரியாற்றில் பெண்கள் உடை மாற்றும் அறைகள் கட்ட ரூ.5.00 இலட்சத்தில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு மேற்படி பணிகள் முன்மொழிவு சமர்ப்பிக்க இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் சேலம் அவர்களிடமிருந்து தடையின்மைச் சான்று வழங்க கோரப்பட்டுள்ளது

42. பஞ்சமி நிலம் நிலம் மற்ற சாதி மக்களல் அபகரிக்கப் படுவதை தடுக்க,மற்ற சாதி மக்கள் பெயரில் மாறுதல விற்பனை செய்யப் படுவதை தடுக்க - TVNMK 3908

42. பஞ்சமி நிலம் நிலம் மற்ற சாதி மக்களல் அபகரிக்கப் படுவதை தடுக்க,மற்ற சாதி மக்கள் பெயரில் மாறுதல விற்பனை செய்யப் படுவதை தடுக்க - TVNMK 3908

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
இராசிபுரம் நகரம், வார்டு டி,பிளாக் 10 , நகர ச.எண் 12,13,14,15,16,17‍மற்றும் கோனேரிபட்டி கிராம ச.எண் 115/,115/1,115/2,115/3,115/4, 115/5,115/6,115/7,115/8,115/9,115/10, 115/11,115/12,115/13,115/14,115/15, 115/16,115/17,115/18,ல் எஸ்சி சமூக நிபந்தனை பட்டா[பஞ்சமி நிலம்] நிலம் மற்ற சாதி மக்களல் அபகரிக்கப் படுவதை தடுக்க,மற்ற சாதி மக்கள் பெயரில் மாறுதல் விற்பனை செய்யப் படுவதை தடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Read Full Post »
»னு விவரம்
பஞ்சமி நிலம் நிலம் மற்ற சாதி மக்களல் அபகரிக்கப் படுவதை தடுக்க,மற்ற சாதி மக்கள் பெயரில் மாறுதல

Publish on: 25-03-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 22-04-2010

பஞ்சமி நிலங்களை மற்ற சாதி மக்கள் கிரயம் செய்யும்போது வருவாய்த்துறையின் மூலம் பட்டா மாறுதல் செய்யப்படுவதில்லை. இது போன்ற இனங்களில் பட்டா மாறுதல் செய்யக்கூடாது என ஏற்கனவே வட்டாட்சியர்கள் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கபப்ட்டுள்ளது. மேலும் இது போன்ற இனங்களில் அரசின் அனுமதி பெற்ற பிறகுதான் கிரயம் செய்யப்படவேண்டும் சார்பதிவாளர்களுக்கு ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டள்ளது.

43. எஸ்சி சமூக நிபந்தனை பட்டா[பஞ்சமி நிலம்] நிலம் மற்ற சாதி மக்களல் அபகரிக்கப் படுவதை தடுக்க,மற்ற சாதி மக்கள் பெயரில் பட்டா மாறுதல் செய்யப் படுவதை தடு

43. எஸ்சி சமூக நிபந்தனை பட்டா[பஞ்சமி நிலம்] நிலம் மற்ற சாதி மக்களல் அபகரிக்கப் படுவதை தடுக்க,மற்ற சாதி மக்கள் பெயரில் பட்டா மாறுதல் செய்யப் படுவதை தடுக்கமற்ற - TVNMK 3470

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
இராசிபுரம் நகரம், வார்டு டி,பிளாக் 10 , நகர ச.எண் 12,13,14,15,16,17‍மற்றும் கோனெரிபட்டி கிராம ச.எண் 115/,115/1,115/2,115/3,115/4, 115/5,115/6,115/7,115/8,115/9,115/10, 115/11,115/12,115/13,115/14,115/15, 115/16,115/17,115/18,ல் எஸ்சி சமூக நிபந்தனை பட்டா[பஞ்சமி நிலம்] நிலம் மற்ற சாதி மக்களல் அபகரிக்கப் படுவதை தடுக்க,மற்ற சாதி மக்கள் பெயரில் பட்டா மாறுதல் செய்யப் படுவதை தடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Read Full Post »
»

மனு விவரம்
எஸ்சி சமூக நிபந்தனை பட்டா[பஞ்சமி நிலம்] நிலம் மற்ற சாதி மக்களல் அபகரிக்கப் படுவதை தடுக்க,மற்ற ச

Publish on : 24-03-2010

தங்களின் மனு தக்க நடவடிக்கைக்காக இராசிபுரம் வட்டாட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டாட்சியரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 26-03-2010

இராசிபுரம் வட்டத்தில் பஞ்சமி நிலங்கள் மற்ற ஜாதி மக்களுக்கு பட்டா மாறுதல் செய்து வழங்கப்படுவதில்லை.

44. ராசிபுரம்- ஆத்தூர் சாலையில் சேந்தமங்கலம் பிரிவு ரோடு அருகே பைப் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிற - TVNMK 2657

44. ராசிபுரம்- ஆத்தூர் சாலையில் சேந்தமங்கலம் பிரிவு ரோடு அருகே பைப் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிற - TVNMK 2657

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
மோகனூரிலிருந்து சீராப்பள்ளி வழியாக வரும் காவிரி குடிநீர் பைப் லைன் அழுத்தம் தாங்காமல், ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகி சாலையில் செல்கிறது. ராசிபுரம்- ஆத்தூர் சாலையில் சேந்தமங்கலம் பிரிவு ரோடு அருகே பைப் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது.கடும் குடிநீர் தட்டுபாடு நிலவி வரும் நிலவி வரும் சூழலில், தண்ணீர் சாலையில் வீணாக வெளியேறுவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாயத்து நிர்வாகம் இனியும் அலட்சியம் கடைபிடிக்காமல் போர்க்கால அடிப்படையில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

»மனு விவரம்
ராசிபுரம்- ஆத்தூர் சாலையில் சேந்தமங்கலம் பிரிவு ரோடு அருகே பைப் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிற

Publish on : 19-03-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக இராசிபுரம் நகராட்சி ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on: 19-03-2010

இராசிபுரம்-ஆத்தூர் சாலையில் சேந்தமங்கலம் பிரிவு ரோடு அருகே குடிநீர் குழாய் உடைந்ததை சரி செய்யப்பட்டுவிட்டது என்பதை தெரிவிக்கப்படுகிறது

45. சொந்தக் கட்டிடம் இல்லாத அங்கன்வாடி மையங்களுக்கு சொந்தக் கட்டடம் - TVNMK 1909

45. சொந்தக் கட்டிடம் இல்லாத அங்கன்வாடி மையங்களுக்கு சொந்தக் கட்டடம் - TVNMK 1909

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
நாமக்கல் மாவட்டத்தில் 1598 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. அதில் 900 மையம் மட்டுமே சொந்தக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன. சொந்தக் கட்டிடம் இல்லாத அங்கன்வாடி மையங்களுக்கு சொந்தக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

»மனு விவரம்
சொந்தக் கட்டிடம் இல்லாத அங்கன்வாடி மையங்களுக்கு சொந்தக் கட்டடம்

Publish on: 03-03-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நேர்முக உதவியாளர் (பொது) சத்துணவுத்திட்ட நியமன அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. நோ்முக உதவியாளரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 18-03-2010

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் 1598 மையங்களில் அரசு கட்டிடத்தில் செயல்படும் 900 மையங்கள் போக மீதமுள்ள அங்கன்வாடி மையங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பிற நிதிகளில் இருந்து சொந்த கட்டிடம் கட்டும் பொருட்டு ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை மனுதாரருக்கு இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது

46. நாமகிரிப்பேட்டை குடிநீர் பற்றாக்குறை - TVNMK 1914

46. நாமகிரிப்பேட்டை குடிநீர் பற்றாக்குறை - TVNMK 1914

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில் அனைத்து வார்டுகளிலும் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மனு விவரம்
நாமகிரிப்பேட்டை குடிநீர் பற்றாக்குறை

Publish on: 03-03-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமகிரிப்பேட்டை பேரூராட்சி ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையரின் அறிக்கை அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 04-03-2010

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் வலைப்பூவிலிருந்து வரப்பெற்ற மக்கள் குறைதீர் மன்றம் வாயிலாக குடிநீர் பிரச்சினை குறித்து விளக்கம் பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது - நாமகிரிப்பேட்டை தேர்வுநிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. அனைத்து பகுதிகளிலும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமும் உள்ளுர் குடிநீர்த் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்க்ப்பட்டு வருகிறது. தற்போது வறட்சியால் ஆழ்துளை கிணறுகள் மற்றும் கோரையாறு குடிநீர் திட்டம் ஆகியவற்றில் போதுமான தண்ணீர் இல்லை காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமும் பெறப்படவேண்டிய நீரின் அளவு நாளொன்றுக்கு 15 இலட்சம் லிட்டர். ஆனால் தற்போது சாராசரியாக 8 முதல் 10 இலட்சம் லிட்டர் தண்ணீரே வருகிறது. இதனால் நாளொன்றுக்கு ஒரு நபருக்கு 60 முதல் 65 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. மேலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர்களுடன் தொடர்பு கொண்டு நாமகிரிப்பேட்டை பேரூராட்சிக்கு வழங்கப்பட வேண்டிய 15 இலட்சம் லிட்டர் குடிநீர்வழங்க கோரப்பட்டுள்ளது. விரைவில் பெறப்பட்டு குடிநீர் விநியோகம் சீராக வழங்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

47. பள்ளிபாளையம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதியில் விசைத்தறி தொழிலை பாதுகாக்கவும், காவிரி ஆற்றில் சாயக்கழிவு நீர் கலந்து குடிநீர் கெட்டுப்போகாமல் இருக்

47. பள்ளிபாளையம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதியில் விசைத்தறி தொழிலை பாதுகாக்கவும், காவிரி ஆற்றில் சாயக்கழிவு நீர் கலந்து குடிநீர் கெட்டுப்போகாமல் இருக்கவும், பொது சுத்திகரிப்பு நிலையம் - TVNMK 1865

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
பள்ளிபாளையம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதியில் விசைத்தறி தொழிலை பாதுகாக்கவும், காவிரி ஆற்றில் சாயக்கழிவு நீர் கலந்து குடிநீர் கெட்டுப்போகாமல் இருக்கவும், பள்ளிபாளையம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதியில் ஓரு பொது சுத்திகரிப்பு நிலையம் அரசே அமைக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.



மனு விவரம்
பொது சுத்திகரிப்பு நிலையம்

Publish on : 02-03-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயற்பொறியாளர் தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

Publish on : 08-03-2010

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், அரசாணை நிலை எண். 213 E&F நாள் 30.03.1989 மற்றும் 127 E&F நாள் 08.05.1998 ஆகியவற்றின்படி, தொழிற்சாலைகளுக்கு அனுமதியளித்து வருகின்றது. பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதியில் தொகுப்பாக அமைந்துள்ள, வாரிய அனுமதி பெற்ற தொழிற்சாலைகள், பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசிற்கு விண்ணப்பித்தால், அதற்குரிய பரிந்துரைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அரசிற்கு செய்யும்.ஏற்கனவே திருப்பூர், கோவை,பெருந்துறை, கரூர், வாணியம்பாடி, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாசுகட்டுபாடு வாரியம் அரசிற்கு தெரிவித்த பரிந்துரைகளின்படி நிர்மாணிக்கப்பட்டு இயங்கி வருகின்றன. மேலும் காவிரியாற்றிலிருந்து 5 கி.மீ தொலைவிற்கு அப்பால் புதிய தொழிற்சாலைகள் அமைக்க இருப்பின் அதற்குரிய பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசாங்கத்திற்கு அத்தொழிற்சாலைகள் விண்ணப்பம் அளித்தாலும், தமிழ்நாடு மாசுகட்டுபாடு வாரியம் தக்க பரிந்துரைகளை அரசிற்கு அளிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

48. திருச்செங்கோட்டில் கூடுதலாக வழங்கப்பட வேண்டிய அரிசி வழங்கப்படுவதில்லை - TVNMK 1626

48. திருச்செங்கோட்டில் கூடுதலாக வழங்கப்பட வேண்டிய அரிசி வழங்கப்படுவதில்லை - TVNMK 1626

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
திருச்செங்கோட்டில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வீதம் ரேஷன் கார்டுக்கு 20 கிலோ அரிசி வழங்க வேண்டும். ஆனால், டி.சி.எம்.எஸ்., கடை எண் 1, பொன்னி கூட்டுறவு கடை போன்ற கடைகளில் 10 கிலோவுக்கு மேல் அரிசி வழங்குவதில்லை.அதுபோல் மத்திய அரசின் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மேலும் கூடுதலாக 15 கிலோ சேர்த்து மொத்தம் 35 கிலோ அரிசி வழங்க மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது. கூடுதலாக வழங்கப்பட வேண்டிய அரிசி வழங்கப்படுவதில்லை. பத்து கிலோ அரிசி மட்டுமே வழங்கப்படுகிறது

திருச்செங்கோட்டில் கூடுதலாக வழங்கப்பட வேண்டிய அரிசி வழங்கப்படுவதில்லை

Publish on: 01-03-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. வழங்கல் அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 12-03-2010

திருச்செங்கோடு வட்டத்தில் தகுதிக்குட்பட்டு குடும்ப அட்டைதாரர்கள் கோரும் அரிசியினை வழங்க வேண்டும் என நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு, பொ.வி.தி களப்பணியாளர்கள் மூலம் இப்பணி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

49, ரேஷன் அரிசி கடத்தல் ; ரேஷன் அரிசி வழங்கிய ரேஷன் கடை ஊழியர்கள் மேலும் கடுமையானநடவடிக்கை - TVNMK 1487

49, ரேஷன் அரிசி கடத்தல் ; ரேஷன் அரிசி வழங்கிய ரேஷன் கடை ஊழியர்கள் மேலும் கடுமையானநடவடிக்கை - TVNMK 1487

அனுப்புநர்: ,
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
திருச்செங்கோடு அருகே, டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் பதுக்கி வைத்திருந்த 250 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். திருச்செங்கோடு பரமசிவகவுண்டம்பாளைத்தில் இருந்து, ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் சகாயம் உத்தரவின் பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் ரவீந்தரன், பறக்கும் படை தனித் துணைதாசில்தார் கதிரேசன் ஆகியோர் பரமசிவகவுண்டம்பாளையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அங்குள்ள சென்னை டிபார்ட்மெண்டல் ஸ்டோர் முன் சந்தேகத்திற்கிடமான வகையில் மினிடோர் ஆட்டோ ஒன்று அரிசி லோடுடன் நின்றிருந்தது. அந்த அரிசியை மாவட்ட வழங்கல் அலுவலர் ரவீந்தரன் உத்தரவின் பேரில் சோதனையிடப்பட்டது. அவை அனைத்தும் ரேஷன் அரிசி எனத் தெரியவந்தது.கடையினுள் நடத்திய சோதனையில், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாத குளிர்பான பாட்டில்களும் இருந்துள்ளன. அதையடுத்து 250 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் குளிர்பான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சாதிக் (22) என்பவரையும் கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக மேல்நடவடிக்கைக்கு சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு வழக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்ற செய்தியினை 23.02.2010 தினமலர் நாளிதளில் பார்த்தோம்,ஆனால் ரேஷன் அரிசி வழங்கிய ரேஷன் கடை ஊழியர்கள் மேலும் கடுமையானநடவடிக்கை மேற்கொள்ளமாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


மனு விவரம்
ரேஷன் அரிசி கடத்தல் ; ரேஷன் அரிசி வழங்கிய ரேஷன் கடை ஊழியர்கள் மேலும் கடுமையானநடவடிக்கை

Publish on : 25-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட வழங்கல் அலுவலரின் அறிக்கை பெற்று பதில் விரைவில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 25-02-2010

இக்கடத்தல் சம்பவம் குறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் புலனாய்வு செய்யப்பட்டு வருகிறது.

Publish on: 25-02-2010

இக்கடத்தல் சம்பவம் குறித்து உணவுகடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் புலனாய்வு செய்யப்பட்டு வருகிறது.

50. காவிரி கழிவு நீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு - TVNMK 1299

50. காவிரி கழிவு நீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு - TVNMK 1299

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
பள்ளிபாளையம் நகரில் உள்ள சாயப் பட்டறைகளில் இருந்து வெளியாகும் கழிவு நீர் காவிரி ஆற்றை மாசுபடுத்துகிறது. நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் தொடர்ந்து சுத்தப்படுத்தாமல் வெளியேற்றும் கழிவுநீரால் விளை நிலங்களும், சுற்றுசூழலும் கெட்டு வருகிறது. காவிரி ஆற்று நீரை பயன்படுத்தும் மக்களுக்கு உடம்பில் அரிப்பு, தோல் நோய், புற்று நோய் ஏற்படுகிறது. எனவே இந்த கழிவு நீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் பொருட்டு மத்திய&மாநில அரசுகள் மான்யத்துடன் கூடிய பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சாயப்பட்டறைகளின் கழிவு நீரை கட்டணம் பெற்று சுத்தப்படுத்தி வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளமாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மனு விவரம்
காவிரி கழிவு நீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு

Publish on: 23-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on: 20-04-2010

பள்ளிபாளையம் மற்றும் கொமாரபாளையம் பகுதிகளிலுள்ள நூல் மற்றும் துணி சாயமிடும் தொழிலகங்கள் தத்தம் வளாகத்தினுள்ளேயே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மறு உபயோகம் செய்ய வலியுறுத்தப்பட்டு, அவ்வமைப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது. கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் முறையினை செயல்படுத்தாத தொழிலகங்கள் ஆய்வில் கண்டறியப்பட்டு நோட்டீசு கொடுக்கப்பட்டு, பின்னர் மூடுதல் உத்தரவு வழங்கப்படுகின்றன. மாவட்ட நிர்வாகத்தின் உதவியோடும், விதிமுறைகளை மீறும் சாய தொழிலகங்கள் சீல் வைக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தொடர்ந்து எடுத்து வருவதனால், காவிரி ஆறு மாசுபடுவது படிப்படியாக நிறுத்தப்பட்டுவிடும். இத்தொழிலகங்களுக்கான பொதுக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் உத்தேசம் தற்போது வாரியத்தில் இல்லை என்பது தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக