செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

திருச்செங்கோடு ஆனங்கூர் சாலை தெப்பக்குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்த

திருச்செங்கோடு ஆனங்கூர் சாலையில் உள்ள தெப்பக்குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்த - TVNMK 1621
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



11. திருச்செங்கோடு ஆனங்கூர் சாலையில் உள்ள தெப்பக்குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்த - TVNMK 1621

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் . திருச்செங்கோடு ஆனங்கூர் சாலையில் உள்ள தெப்பக்குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மனு விவரம்


Publish on: 01-03-2010


தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக திருச்செங்கோடு நகராட்சி ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்


Publish on: 05-03-2010

அய்யா, திருச்செங்கோடு ஆனங்கூர்சாலையில் உள்ள தெப்பக்குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்த கோரியதில் தற்போது நீர் அதிகம் உள்ளதால் வரும் மே மாத காலத்தில் குளத்தின் நீர் மட்டம் குறைய வாப்புள்ளதால் அப்பொழுது தூர்வார நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. நகராட்சி ஆணையாளர், திருச்செங்கோடு நகராட்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக